மலேசிய குடிநுழைவு அதிகாரிகள் நலனுக்காக நடவடிக்கை

1 mins read
75dc3bae-529e-4740-b0e0-adcb72111efa
-

ஜோகூர் பாரு: மலே­சி­யா­வில் பல்­வேறு குடி­நு­ழைவு, சோத­னைச் சாவ­டி­களில் பணி­பு­ரி­யும் ஊழி­யர்­க­ளின் நலனை மேம்­ப­டுத்­தப்­போ­வ­தாக அந்­நாட்டு அர­சாங்­கம் உறு­தி­ய­ளித்­துள்­ளது. சிங்­கப்­பூ­ரை­யும் மலே­சி­யா­வை­யும் இணைக்­கும் இரண்டு நில­வ­ழிக் குடி­நுழைவு, சோத­னைச் சாவ­டி­கள், அவற்­றில் பய­ணி­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­து­வ­தற்­கான நிலை­யங்­கள் ஆகி­ய­வற்­றில் வேலை செய்­யும் ஊழி­யர்­க­ளுக்கு இது பொருந்தும். நில­வ­ழிச் சோத­னைச் சாவ­டி­களில் சேவைத் தரத்தை உயர்த்­து­வது இலக்கு.

தற்­போது நடப்­பில் இருக்­கும் வழி­மு­றை­களை மேம்­ப­டுத்த மாநில, மத்­திய அர­சாங்­கங்­கள் கட­மைப்­பட்­டுள்­ள­தாக ஜோகூர் முத­ல­மைச்­சர் ஒன் ஹஃபிஸ் காஸி கூறி­யுள்­ளார். இரு நில­வழிக் குடி­நு­ழை­வுச் சோத­னைச் சாவ­டி­க­ளி­லும் அடிக்­கடி ஏற்­படும் போக்­கு­வ­ரத்து நெரி­ச­லைக் குறைக்­கும் நோக்­கு­டன் முயற்­சி­கள் எடுக்­கப்­படுவதை அவர் குறிப்­பிட்­டார்.

"சுல்­தான் இஸ்­கந்­தர் கட்­ட­டம் (பிஎஸ்ஐ), சுல்­தான் அபு பக்கர் நிலை­யம் (கேஎஸ்­ஏபி) ஆகி­ய­வற்­றின் ஊழி­யர்­கள் உச்ச நேரத்­தில் வேலை பார்க்­கும் நேரத்தை மறு­ப­ரி­சீ­லனை செய்ய அதி­கா­ரி­கள் ஒப்­புக்­கொண்­டுள்­ள­னர். அதன் மூலம் குடி­நு­ழைவு அதி­கா­ரி­கள் பற்­றாக்­கு­றைக்­குத் தீர்வு கிடைக்­கும்.

"அதோடு, அதிக நேரம் வேலை செய்­யும்­போது வழங்­கப்­படும் கூடு­தல் சம்­ப­ளம், ஒட்­டு­மொத்த ஊழி­யர் நலனை மேம்­படுத்­தும் நோக்­கு­டன் ஓய்­வெ­டுப்­ப­தற்­கான இடங்­கள், குளிர்­சா­தன வசதி, சாவ­டி­களில் அமர இருக்­கை­கள் போன்­ற­வற்றை வழங்­கு­வது குறித்­தும் அதி­கா­ரி­கள் ஆலோ­சிப்­பர்," என்று திரு ஒன் ஹாஃபிஸ் ஃபேஸ்புக் பதி­வில் தெரி­வித்­தார்.

பிஎஸ்ஐ கட்­ட­டத்­தில் சிசி­டிவி கண்­கா­ணிப்பு கேம­ராக்­க­ளைப் பொருத்­து­வது, கேஎஸ்­ஏபி நிலை­யத்­தில் மோட்­டார் சைக்­கிள் பாதை­யின்­மேல் கூரை கட்­டு­வது போன்ற பரிந்­து­ரை­க­ளைப் பற்றி இது­வரை பேச்­சு­வார்த்தை இடம்­பெற்­றுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்டுள்­ளது.