'அன்வார் அரசாங்கத்தைக் கவிழ்ப்பது கடினம்'

'அன்வார் அரசாங்கத்தைக் கவிழ்ப்பது கடினம்'

1 mins read
4ba54c24-a337-4801-bfd6-7f9a98dcf5aa
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யப் பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கி­மின் ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 'பிஎன்' எனும் தேசிய முன்­ன­ணி­யின் உறுப்­பி­னர்­கள், ஆட்சியைக் கவிழ்க்கும் திட்டத்தில் ஈடு­பட்டுள்­ள­னரா என்­பது தமக்­குத் தெரி­யாது என்று அந்­நாட்­டின் தற்­காப்பு அமைச்­சர் முகம்­மது ஹசான் கூறி­யுள்­ளார். அப்­ப­டியே அவர்­கள் திட்டம் தீட்­டி­னா­லும் கட்­சித் தாவ­லுக்கு எதி­ரான சட்­டம் நடப்­பில் இருப்­ப­தால் அர­சாங்­கத்­தைக் கவிழ்ப்­பது கடி­ன­மாக இருக்­கும் என்­றார் அவர்.

"அது கட்­சித் தாவல் தடை சட்­டத்­துக்கு எதி­ரா­னது. அவ்­வாறு செய்­ப­வர்­கள் தய­வு­செய்து பதவி வில­குங்­கள். ஆனால், இது­வரை யாரும் எங்­க­ளுக்கு எதி­ரா­கச் செயல்­ப­டு­வ­து­போல் தெரி­ய­வில்லை," என்று தேசிய முன்­னணி­யின் துணைத் தலை­வ­ரான முகம்­மது ஹசான் குறிப்­பிட்­டார்.