பேங்காக்: இம்மாதம் 14ஆம் தேதியன்று தாய்லாந்தில் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது.
அந்நாட்டின் அடுத்த பிரதமராக முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ராவின் மகள் பேடோங்டார்ன் ஷினவத்ராவுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது.
கடந்த திங்கட்கிழமையன்று பேங்காக்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுத்தார் திருவாட்டி பேடோங்டார்ன்.
இம்மாதம் 12ஆம் தேதியன்று நடைபெறும் தமது கட்சியின் பேரணியில் தாம் கலந்துகொள்வது நிச்சயம் என்று குழந்தையைப் பெற்றெடுத்த இரண்டே நாள்களில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று தெரிவித்தார்.
தமது சக்திக்குத் தமது பிள்ளைகள்தான் காரணம் என்று அவர் கூறினார். மருத்துவமனையில் கூடிய செய்தியாளர்களிடம் தமது ஆண் குழந்தையை அவர் பெருமிதத்துடன் காட்டினார்.
அப்போது அவரது கணவரான பிடோக் சூக்சவாஸ் அவருடன் இருந்தார்.
புதிதாகப் பிறந்த தமது ஆண் குழந்தையைச் செய்தியாளர்களிடம் காட்டும் திருவாட்டி பேடோங்டார்ன் ஷினவத்ரா. படம்: ஏஎஃப்பி

