பேங்காக்: லாவோஸ் அரசாங்கத்தை மிகக் கடுமையாக விமர்சித்து வந்த அரசியல் ஆர்வலர் லாவோஸ் தலைநகர் வியந்தியேனில் உள்ள ஒரு காப்பிக்கடையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
திரு அனோவ்சா லுவாங்சுப்டோமை துப்பாக்கிக்காரர் ஒருவர் கடந்த சனிக்கிழமையன்று துப்பாக்கியால் சுடுவதைக் காட்டும் காணொளி லாவோஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகத்தில் வெளியிடப்பட்டது.
திரு லுவாங்சுப்டோமைச் துப்பாக்கியால் சுட்டப் பிறகு அந்த இடத்திலிருந்து அந்தத் தாக்குதல்காரர் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

