மலேசியாவில் வெப்பம்: பள்ளிகளில் சீருடை அணிவது கட்டாயமில்லை

மலேசியாவில் வெப்பம்: பள்ளிகளில் சீருடை அணிவது கட்டாயமில்லை

1 mins read
1ab5fd64-8b42-4498-bc47-0292b1374b35
அதிக வெப்பத்தால் அவதிப்படுகிறது மலேசியா. கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ் -

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் வெப்பநிலை அதிகமாக இருந்துவருவதால் தங்களுக்கு வசதியாக இருக்கும் ஆடைகளில் பள்ளிகளுக்குச் செல்ல மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் கல்வி அமைச்சின்கீழ் வரும் அனைத்து பள்ளிகளுக்கும் கல்வி நிலையங்களுக்கும் இது பொருந்தும்.

மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வித்துறை ஊழியர்கள் ஆகியோரின் நலனுக்கும் பாதுகாப்புக்கும் என்றுமே முன்னுரிமை வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

அதிக வெப்பநிலையாலும் தொடரும் வறட்சியாலும் மலேசியா பாதிக்கப்பட்டுள்ளது.