கோலாலம்பூரில் நிலச்சரிவு: உயிருடன் புதையுண்ட பாதுகாவலர்

கோலாலம்பூரில் நிலச்சரிவு: உயிருடன் புதையுண்ட பாதுகாவலர்

1 mins read
4b0445ed-c268-49a0-9be3-5512f133c3a6
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யத் தலை­ந­கர் கோலா­லம்­பூ­ருக்கு அரு­கில் உள்ள தாமான் செபூத்­தே­யில் நேற்று நிலச்­ச­ரிவு ஏற்­பட்­டது. இதில் பாது­கா­வ­லர் ஒரு­வர் உயி­ரு­டன் புதை­யுண்டு மாண்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. சம்­ப­வம் நிகழ்ந்­த­போது அவர் பாது­கா­வ­லர்­க­ளுக்­கான கூடத்­தில் இருந்­த­தாக அறி­யப்­படு­கிறது. நிலச்­ச­ரிவு குறித்து நேற்று பின்­னி­ரவு 12.54 மணி அள­வில் தக­வல் கிடைத்­த­தாக கோலா­லம்­பூர் தீய­ணைப்பு, மீட்­புப் பணித் துறை கூறி­யது. நிலச்­சரிவு கார­ண­மாக ஒரு­வர் உயி­ரு­டன் புதை­யுண்­ட­தாக தங்­க­ளி­டம் தெரி­விக்­கப்­பட்­ட­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.

அவரை மீட்க நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது.