ஓராண்டில் முதன்முறையாக உணவு விலைகள் ஏற்றம்

1 mins read
9d193f81-5fb1-45f3-9db8-2ba0932d9955
-

ரோம்: ஐக்­கிய நாட்டு உணவு அமைப்­பின் உலக விலைக் குறி­யீடு ஓராண்­டில் முதன்­மு­றை­யாக ஏப்­ர­லில் உயர்ந்­தது.

உல­க­ள­வில் அதி­கம் வர்த்­தகம் செய்­யப்­படும் உண­வுப் பொருள்­க­ளைக் கண்­கா­ணிக்­கும் உணவு, வேளாண் அமைப்­பின் விலைக் குறி­யீடு, ஏப்­ர­லில் 127.2 புள்­ளி­க­ளாக இருந்­தது. ஒப்­பு­நோக்க, கடந்த மார்ச் மாதம் அது 126.5 புள்­ளி­க­ளா­கப் பதி­வா­னது. சர்க்­கரை, இறைச்சி, அரிசி விலை அதி­க­ரிப்பை இது பிர­தி­பலிப்­ப­தாக அந்த அமைப்பு கூறி­யது.

"பொரு­ளி­யல் மீட்­சி­ய­டை­யும் வேளை­யில் தேவை­யும் அதி­க­ரிக்­கும். இத­னால் உணவு விலை­களும் அதி­க­ரிக்­கின்­றன," என்­றார் ஐ.நா. உணவு அமைப்­பின் தலை­மைப் பொரு­ளி­யல் நிபு­ணர் மெக்­சிமோ டொரேரோ.

மார்ச் மாதத்­துக்­குப் பிறகு சர்க்­கரை விலைக் குறி­யீடு 17.6 விழுக்­காடு ஏற்­றம் கண்­டது. 2011 அக்­டோ­ப­ருக்­குப் பிறகு இதுவே ஆக அதிக விலை.