மணிலா: பல்வேறு ஆசிய நாடுகளிலிருந்து கடத்திக் கொண்டுவரப்பட்ட 1,000க்கும் மேலானோரை பிலிப்பீன்ஸ் மீட்டுள்ளது. கடத்தப்பட்டவர்கள் பிடித்து வைக்கப்பட்டு இணைய மோசடிச் செயல்களில் ஈடுபடுத்தப்பட்டவர்கள்.
மொத்தம் 1,090 பேர் மீட்கப்பட்டதாக தேசிய காவல்துறையின் இணையக் குற்றத் தடுப்புப் பிரிவுக்கான பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
தென்கிழக்காசிய வட்டாரத்தில் இடம்பெற்றுவரும் இணைய மோசடிச் செயல்கள் அண்மைக் காலமாக உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பலவேளைகளில் போலி மின்னிலக்க நாணயங்களில் முதலீடு செய்வதை விளம்பரப்படுத்தும் செயல்களில் கடத்தப்பட்டவர்கள் ஈடுபடுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

