முடிவுக்கு வந்த கொவிட்-19 பொதுச் சுகாதார அவசரநிலை

முடிவுக்கு வந்த கொவிட்-19 பொதுச் சுகாதார அவசரநிலை

1 mins read
c15aebc2-30f6-44d4-a50f-527c2dc329dc
-

ஸூரிக்: கொவிட்-19 கிரு­மிப் பர­வல் இனி பொதுச் சுகா­தார அவ­ச­ர­நி­லை­யாக வகைப்­ப­டுத்­தப்­ப­டாது. மூன்­றாண்­டு­க­ளுக்­கும் மேல் நீடித்த அவ­ச­ர­நி­லையை உல­கச் சுகா­தார நிறு­வ­னம் நேற்று முன்­தி­னம் அகற்­றி­யது.

2019ஆம் ஆண்­டி­று­தி­யில் தலை­தூக்­கிய கொவிட்-19 கிருமி 2020ஆம் ஆண்­டி­லி­ருந்து உல­கைத் திக்­கு­முக்­காட வைத்­தது. மில்­லி­யன் கணக்­கா­னோர் அதற்­குப் பலி­யா­யி­னர், உல­கப் பொரு­ளி­யல் பெரிய அள­வில் பாதிக்­கப்­பட்­டது.

உல­க­ள­வில் கொவிட்-19 கிருமித்­தொற்­றின் பாதிப்­பைக் குறைக்க தடுப்­பூ­சி­கள் பெரி­தும் கைகொடுத்தன. சென்ற ஆண்டு தொடக்­கத்­திலி­ருந்து பல உலக நாடு­கள் கிரு­மிப் பர­வலை சகித்­துக்­கொண்டு வாழவும் பழ­கிக்­கொண்­டன.