டெக்சஸ் கடைத்தொகுதியில் துப்பாக்கிச்சூடு; எட்டு பேர் மரணம்

1 mins read
50caabd7-3f32-4f9b-8b05-f582d417bf5e
தாக்குதல் நடந்த கடைத்தொகுதியிலிருந்து வெளியேறும் மக்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

டாலஸ்: அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டனர்.

தாக்குதல் டாலஸ் நகரின் வடக்குப் பகுதியில் இருக்கும் ஏலன் எனும் கடைத்தொகுதியில் நடந்தது.

மாண்டோரில் சிலர் சிறுவர்கள் எனக் கருதப்படுகிறது.

குறைந்தது எழுவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் மூவர் கவலைக்கிடமாக உள்ளனர்.

தாக்குதலை நடத்தியவர் உட்பட எழுவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

துப்பாக்கிச்சூட்டு சத்தம் கேட்டதும் அங்கிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் தாக்குதல்காரைச் சுட்டுக் கொன்றார்.

இருவர் பின்னர் மருத்துவமனையில் மாண்டனர்.