ஆப்கானிஸ்தானுக்கு உதவ சீனா, பாகிஸ்தான் ஒப்புதல்

ஆப்கானிஸ்தானுக்கு உதவ சீனா, பாகிஸ்தான் ஒப்புதல்

1 mins read
6ea07d25-5472-41a9-9332-cf44cd190b71
-

இஸ்­லா­மா­பாத்: சீனா­வின் 'பெல்ட் அண்ட் ரோடு' எனும் வர்த்தக இணைப்புப் பாதை­த் திட்­டத்தை ஆப்கா­னிஸ்­தா­னில் விரி­வாக்­கம் செய்­வது தொடர்­பில் தலி­பான் அர­சாங்­கம், சீனா, பாகிஸ்­தான் ஆகி­ய­வற்­று­டன் இணக்­கம் கண்டுள்­ளது.

60 பில்­லி­யன் டாலர் ($80 பில்­லி­யன்) மதிப்­பி­லான சீன-பாகிஸ்­தான் பொரு­ளி­யல் பாதையை ஆப்கா­னிஸ்­தா­னில் விரி­வு­ப­டுத்­து­வது உள்­ளிட்ட பல்­வேறு மறு­கட்­டு­மா­னப் பணி­கள் தொடர்­பில் சீனா­வும் பாகிஸ்­தா­னும் ஆஃப்கா­னிஸ்­தா­னுக்கு உத­வியை உறு­தி­செய்­துள்­ளன.

முன்­ன­தாக, ஆப்கா­னிஸ்­தா­னிய வெளி­யு­றவு அமைச்­சர் அமிர் கான் முட்­டாக்கி மீதான அனைத்­து­ல­கத் தடை­யில் இருந்து பாகிஸ்­தான் பய­ணத்­துக்கு விலக்கு அளிக்­கப்­பட்ட நிலை­யில் சென்ற வெள்­ளிக்­கிழமை அவர் இஸ்­லா­மா­பாத்­திற்கு நான்கு நாள் அதி­கா­ரத்­து­வப் பய­ணம் மேற்­கொண்­டார்.

அங்கு பாகிஸ்­தா­னிய, சீன வெளி­யு­றவு அமைச்­சர்­களை அவர் சந்­தித்­துப் பேசி­னார்.

ஆப்கா­னிஸ்­தா­னின் தலி­பான் அர­சாங்­கம் பெண்­கள் மீது விதித்­துள்ள தடை­க­ளுக்கு அனைத்­து­லக அள­வில் கண்­ட­னக் குரல்­கள் ஒலிக்­கும் நிலை­யில் அந்­தச் சந்­திப்பு நிகழ்ந்­துள்­ளது குறிப்பிடத்தக்கது.

ஆப்கா­னிஸ்­தா­னில் பாது­காப்­பை­யும் பொரு­ளி­யல் நிலைத்­தன்­மை­யை­யும் மேம்­ப­டுத்த அந்­நாட்­டிற்கு உத­வும் வழி­கள் குறித்து சந்­திப்­பில் கவ­னம் செலுத்­தப்­பட்­ட­தா­கக் கூறப்­பட்­டதாக ஊடகங்கள் கூறின.

அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய நிர்­வா­கம், அண்டை நாடு­க­ளு­டன் இணக்­க­மான போக்கு, மித­மான அர­சாங்­கக் கொள்­கை­கள் ஆகி­ய­வற்­றைக் கடைப்­பி­டிக்­கும்­படி ஆப்கா­னிஸ்­தானை கேட்­டுக்­கொண்­ட­தா­க­ பாகிஸ்­தா­னிய, சீன வெளி­யு­றவு அமைச்­சர்­கள் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னர். ஆனால் பக்­கத்து நாடு­க­ளின் பாது­காப்பை முக்கியமாகக் கருதும்படி ஆப்கானிஸ்தானிடம் வலியுறுத்தியதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.