கட்டுக்கடங்காத காட்டுத் தீ: கனடாவில் அவசரநிலை அறிவிப்பு

கட்டுக்கடங்காத காட்டுத் தீ: கனடாவில் அவசரநிலை அறிவிப்பு

1 mins read
cb3d44a8-be2c-4bab-9b46-a3fd199352be
Google News Preferred Icon

கனடாவின் அல்பெர்ட்டா வட்டாரத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு உள்ளது. காட்டுத் தீ பரவியதால் 25,000க்கு மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 100க்கு மேலான பகுதிகளில் காட்டுத் தீ பற்றி எரிவது முன்னெப்போதும் இல்லாத நிலை என்றார் மாநில முதல்வர் டேனியல் ஸ்மித். 122,000 ஹெக்டேர் பரப்பளவு சேதமடைந்ததாக அவர் சொன்னார். பலத்த காற்று வீசுவதால் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை. ஹெலிகாப்டர்கள் தீயணைப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கனடாவின் முக்கிய எண்ணெய் உற்பத்தி வட்டாரம் அல்பெர்ட்டா. இப்போதைக்கு எண்ணெய் உற்பத்தி நிலையங்களுக்கு உடனடி ஆபத்து இல்லை எனக் கூறப்படுகிறது.

படம்: ராய்ட்டர்ஸ்