கியவ் மீது மீண்டும் தாக்குதல் தொடுத்த ரஷ்யா

2 mins read
9f7f4a48-9338-4dfb-b93d-f367116bed82
-

கியவ்: உக்­ரேன் தலை­ந­கர் கியவ் மீது ரஷ்யா மீண்­டும் தாக்­கு­தல் நடத்­தி­யது. கியவ்வை நோக்­கி ரஷ்யா ஏறத்­தாழ 15 ஏவு­க­ணை­களை நேற்று பாய்ச்­சி­யது.

அந்த ஏவு­க­ணை­கள் அனைத்­தை­யும் உக்­ரே­னியத் தற்­காப்­புப் படை சுட்டு வீழ்த்­தி­ய­தாக அந்நாட்டு ராணு­வம் தெரி­வித்தது.

ரஷ்­யா­வி­லி­ருந்து ஏவு­க­ணை­கள் பாய்ச்­சப்­பட்­ட­போது கியவ் நக­ர­மெங்­கும் எச்­ச­ரிக்கை ஒலி எழுப்­பப்­பட்­டது.

உக்­ரே­னிய மக்­க­ளைக் குறி­வைத்து இத்­தாக்­கு­தல் நடத்­தப்­பட்­ட­தாக கியவ் நக­ரத்­தின் ராணு­வப் பிரி­வுத் தலை­வர் திரு செர்ஹி போப்கோ கூறி­னார்.

ஆனால் இத்­தாக்­கு­லில் உக்­ரே­னி­யர்­கள் யாரும் உயி­ரி­ழக்­க­வில்லை என்­றார் அவர்.

ரஷ்யா நேற்று அதன் வெற்றி தினத்­தைக் கொண்­டா­டி­யது. 1945ஆம் ஆண்­டில் இரண்­டாம் உல­கப் போரில் ஜெர்­ம­னி­யைத் தோற்­க­டித்­த­தைக் கொண்­டா­டும் வகை­யில் இந்த கொண்­டாட்­டம் ரஷ்­யா­வில் ஆண்­டு­தோ­றும் நடை­பெ­று­கிறது.

நேற்று நடை­பெற்ற கொண்­டாட்­டத்­தில் ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டின் கலந்­து­கொண்டு பேசி­னார். அப்­போது உல­கம் திருப்­பு­மு­னையை எதிர்­கொள்­வ­தாக அவர் கூறி­னார். ரஷ்­யா­வின் எதிர்­கா­லத்­துக்­காக போராடி வரு­வ­தாக அவர் தெரி­வித்­தார்.

"ரஷ்­யா­வுக்கு எதி­ரா­கப் போர் தொடுக்­கப்­பட்­டுள்­ளது. அனைத்­து­ல­கப் பயங்­க­ர­வா­தத்தை முறி­யடித்­துள்­ளோம். டோன்­பாஸ் மக்­க­ளைப் பாது­காப்­போம்," என்று மாஸ்­கோ­வில் உள்ள செஞ்­ச­துக்­கத்­தில் அதி­பர் புட்­டின் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே, ரஷ்ய எல்லை அரு­கில் உள்ள பெல்­கொ­ரோட் பகு­தி­யில் உக்­ரே­னி­யப் படை­கள் பீரங்­கித் தாக்­கு­த­லைத் தீவி­ரப்­படுத்­தி­யுள்­ளன. நேற்று முன்­தினம் உக்­ரேன் படை­கள் நடத்­திய தாக்­கு­த­லில் குறைந்­தது ஐந்து பேர் மாண்­ட­னர். அது­மட்டு­மல்­லாது, அங்­குள்ள பல வீடு­கள் சேத­ம­டைந்­தன, மின்­சா­ரம் துண்டிக்­கப்­பட்­டது.

பொது­மக்­க­ளைக் குறி­வைக்­க­வில்லை என்­றும் ரஷ்­யா­வின் ராணு­வக் கட்­ட­மைப்பை அழித்து நில­வ­ழித் தாக்­கு­தலை நடத்த திட்­ட­மிட்­டுள்­ள­தாகவும் உக்­ரேன் கூறி­யது.

இந்­நி­லை­யில், உக்ரேன்-ரஷ்யா போரை அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டுவரும் சாத்தியம் இப்போதைக்கு இல்லை என்று ஐநா தலைவர் அண்டோனியோ குட்டேரஸ் தெரிவித்துள்ளார்.

போரில் வெற்றி பெற முடியும் என்று இருதரப்பினரும் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதால் யாரும் பேச்சுவார்ததைக்குத் தயாராக இல்லை என்றார் திரு குட்டேரஸ்.