மலேசியா: 2025ஆம் ஆண்டில் நெகிழிப் பைகளுக்குத் தடை

1 mins read
68900e79-368b-4256-aa78-a31fdf1fbf84
-

கோலா­லம்­பூர்: மலே­சிய அர­சாங்­கம், 2025ஆம் ஆண்­டுக்­குள் நாடு முழு­வ­தும் சில்­லறை வர்த்­த­கங்க­ளுக்­கா­கப் பயன் ­ப­டுத்­தப்­படும் நெகிழிப் பைக­ளுக்குத் தடை விதிக்க முடிவு செய்­துள்­ளது.

அந்­நாட்­டின் இயற்கை வள, சுற்­றுச் ­சூ­ழல், பரு­வ­நிலை மாற்ற அமைச்­சர் நிக் நஸ்மி நிக் அஹ­மட் இதனைத் தெரி­வித்­தார்.

தற்­போது கட்­டம் கட்­ட­மாக பேரங்­காடியிலிருந்து குறிப்­பிட்ட கடை­கள் வரை நெகி­ழிப் பைக­ளின் பயன்­பாட்டை குறைக்­கும் 'நோ பிளாஸ்­டிக் பேக்ஸ்' இயக்­கம் மேற்­கொள்­ளப்­பட்டு வருகிறது.

இந்த இயக்­கம் மற்ற வர்த்­தகங் களுக்கும் விரி­வு­ப­டுத்­தப்­பட்டு 2025ஆம் ஆண்­டு­வாக்­கில் நெகி­ழிப் பைக­ளின் பயன்­பாடு முற்­றி­லும் அகற்­றப்­படும் என்று அமைச்சர் தெரி­வித்­தார்.

2025ஆம் ஆண்­டில் வியா­பாரி­கள் தொடர்ந்து நெகி­ழிப் பைக­ளைப் பயன் ­ப­டுத்­தி­னால் அவர்­க­ளுக்குத் தண்­டனை விதிக்­கப்­ப­டு­ம். அதோடு மாற்றத்தைக் ஏற்படுத்துவதற்கான திட்­டங்­களும் மேற்­கொள்­ளப்­படும்.

இது தொடர்­பான தக­வல்­கள் பின்னர் வெளி­யி­டப்­படும் என்று திரு நிக் நஸ்மி நிக் அஹமட் குறிப்­பிட்­டார்.

சிலாங்­கூ­ரின் பெட்­டா­லிங் ஜெயா­வில் நேற்று நடை­பெற்ற மறு­சு­ழற்சி பை அறி­முக நிகழ்ச்­சி­யில் பங்­கேற்ற பிறகு செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அமைச்சர் இந்த விவரங்களை வெளியிட்டார்.