'மாற்று எரிபொருளுக்கு உலகம் தயாராகவில்லை'

'மாற்று எரிபொருளுக்கு உலகம் தயாராகவில்லை'

1 mins read
56820e4b-87c9-4c0e-b778-148a3e7fa9c6
-

வாஷிங்­டன்: எண்­ணெய், எரி­வாயு, நிலக்­கரி உற்­பத்தி அல்­லாத எரி­பொ­ருள் கழிவு வெளி­யேற்­றத்தை படிப்­ப­டி­யா­கக் குறைக்க நாடு­கள் ஒப்­புக்­கொள்ள வேண்­டும் என்று ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சு­கள் அறை­கூ­வல் விடுத்­துள்­ளது. இவ்­வாண்டு டிசம்­ப­ரில் ஐநா­வின் பரு­வ­நிலை மாநாடு ஐக்­கிய அரபு சிற்­றர சுகளில் நடை­பெ­று­கிறது.

'காப்28' எனும் அந்­தப் பரு­வ­நிலை மாற்று மாநாட்­டில் உல­கம் வெப்­ப­ம­ய­மா­வ­தற்கு எதி­ரா­கப் போரா­டு­வது குறித்து நாடு­கள் விவா­திக்க விருக்­கின்­றன. சில பணக்­கார நாடு­கள் படிம எரி­பொ­ரு­ளைப் படிப்­ப­டி­யா­கக் குறைக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்தி வரு­கின்­றன. ஆனால் ஐக்­கிய அரபு சிற்­றர சுக­ளின் கருத்து இதற்கு எதிர்­மா­றாக உள்­ளது. மாற்று எரி­பொ­ரு­ளுக்கு உல­கம் தயா­ராக வில்லை என்று அது கூறி­யுள்­ளது. இத­னால் கரி­மக் கழி­வைக் குறைக்­கும் விவ­கா­ரத்­தில் நாடு களுக்கு இடையே முரண்­பாடு நில­வு­கிறது.