கோலாலம்பூர்: லங்காவியில் உள்ள ஆறு வயது சிறுவன், பொம்மை கார் வாங்கு வதற்காக பெற்றோரின் காரை சகோதரருடன் ஓட்டிச் சென்று விபத்தில் சிக்கி யிருக்கிறான். செவ்வாய் இரவு அவன் இரண்டரை கிலோ மீட்டர் தூரத்துக்கு காரை ஓட்டிச் சென்ற பிறகு கட்டுப்பாட்டை இழந்த கார் விளக்குக் கம்பத்தில் மோதியது.
சிறுவனின் கன்னத்தில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. மூன்று வயதான அவனது சகோதரன் காயமின்றித் தப்பினான்.
இச்சம்பவம் குறித்து லங்காவி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெற் றோருக்குத் தெரியாமல் சிறுவன் காரை ஓட்டி யிருக்கிறான் என்று காவல்துறை உதவி ஆணையர் ஷரிமான் தெரிவித்தார்.

