பேங்காக்: தாய்லாந்தில் ஆயிரக்கணக்கானவர்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட தம்பதிக்கு நேற்று தலா 12,640 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் 5,056 ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை குறைக்கப்பட்டது. இருந்தாலும் வந்தானி டிப்பாவேத்தும் அவரது கணவர் மேதி சின்பாவும் (படம்) இருபது ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனையை அனுபவிப்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. அந்நாட்டில் அதிகபட்ச சிறைத் தண்டனை இருபது ஆண்டுகளாக உள்ளதே அதற்கு காரணம். தம்பதியினர் ஏழு பேருடன் சேர்ந்து தங்களுடைய சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்தால் 93% லாபம் கிடைக்கும் என்று கூறி 2019ஆம் ஆண்டு மார்ச் முதல் அக்டோபர் வரையில் ஃபேஸ்புக் மூலமாக பலரைச் சேர்த்துள்ளனர். இவர்களது மோசடி திட்டத்தில் மொத்தம் 2,533 பேர் 1.3 பில்லியன் பாட் (S$51.3 மில்லியன்) முதலீடு செய்தனர்.

