'மியன்மார் அமைதி முயற்சிக்கு ஆசியானிடம் ஒற்றுமை தேவை'

2 mins read
26f317cd-0673-470b-939d-a1e3bd13c039
-

லாபு­வான் பாஜோ: ஆசி­யான் முன்­வைத்த அமைதி திட்­டத்தை மியன்­மார் ராணுவ அர­சாங்­கம் மதிக்­காத நிலை­யில் அம்­மு­யற்சி வெற்றி பெற வேண்­டு­மா­னால் ஆசி­யா­னி­டையே ஒற்­றுமை தேவை என்று இந்­தோ­னீ­சிய அதி­பர் ஜோகோ விடோடோ வலி யுறுத்­தி­யுள்­ளார்.

அப்­போ­து­தான் மியன்­மா­ருக்­கான அமைதி திட்­டத்­தில் முன்­னேற்­றத்­தைக் காண முடி­யும் என்­றார் அவர்.

இந்­தோ­னீ­சி­யா­வின் லாபு­வான் பாஜோ­வில் இரண்டு நாள் ஆசி­யான் உச்­ச­நிலை மாநாடு நடை பெற்றது. இதில் மியன்­மா­ரில் நடக்­கும் வன்­மு­றை­க­ளைப் பற்றியே அதி­கம் பேசப்­பட்­டது.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மியன்­மா­ரில் தூதர்­களை ஏற்­றிச் சென்ற வாக­னங்­கள் மீது மேற் கொள்­ளப்­பட்ட தாக்­கு­த­லுக்கு ஆசி­யான் தலை­வர்­கள் கண்­ட­னம் தெரி­வித்­த­னர்.

இந்­நி­லை­யில் மாநாட்­டின் இரண்­டா­வது மற்­றும் கடைசி நாளான நேற்று தலைமையேற்றுப் பேசிய அதி­பர் விடோடோ, மியன்­மா­ரின் பங்­கேற்­பு­டன் ஆசி­யான் ஐந்து அம்ச அமை­தித் திட்­டத்தை அம­லாக்க இந்­தோ­னீ­சியா தொடர்ந்து முயற்­சி­களை எடுக்­கும் என்­றார்.

கலந்­து­ரை­யா­டல், மனி­தா­பி­மான உத­வி­கள், வன்­மு­றைக்கு முற்­றுப்­புள்ளி வைப்­ப­தற்­கான நெருக்­கு­தல் போன்­ற­வற்­றின் மூலம் முயற்சி எடுக்­கப்­படும் என்று அவர் கூறி­னார்.

"நேர்­மை­யா­கச் சொன்­னால் ஐந்து அம்ச அமைதி திட்­டத்­தில் எந்­த­வித முன்­னேற்­ற­மும் ஏற்­ப­ட­வில்லை. இதனை முன்­னெ­டுத்­துச் செல்ல ஆசி­யா­னி­டம் ஒற்றுமை அவ­சி­யம்," என்று இந்தோனீசிய அதி­பர் குறிப்­பிட்­டார். 2021ஆம் ஆண்­டில் மியன்மாரில் ஆங் சான் சூச்சி தலை­மை­யி­லான ஜன நாயக அர­சாங்­கத்­தைக் கவிழ்த்து ஆட்­சியை ராணுவம் கைப்­பற்­றி­யது.

இதன் பிறகு ஆயி­ரக்­க­ணக்­கான பொது­மக்­கள் கொல்­லப்­பட்­ட­னர்.

ஏரா­ள­மா­னோர் இடம் மாறி­னர். ஆசி­யான் முன்­வைத்த அமைதி திட்­டம், மியன்­மா­ரில் அனைத்­துத் தரப்­பி­ன­ரும் வன் ­மு­றை­யைக் கைவிட்டு பேச்­சு­வார்த்தை நடத்த வலி­யு­றுத்­து­கிறது.