பாகிஸ்தானில் ராணுவம் களமிறங்கியது; இம்ரான் கட்சித் தலைவர்களும் கைது

பாகிஸ்தானில் ராணுவம் களமிறங்கியது; இம்ரான் கட்சித் தலைவர்களும் கைது

2 mins read
a8dc3d1b-90d0-4b48-b56b-d04bb0c933e6
-

இஸ்­லா­மா­பாத்: பாகிஸ்­தா­னில் மூன்று நாள்­க­ளாக தொட­ரும் ஆர்ப்­பாட்­டங்­க­ளை­யும் வன் முறைச் சம்­ப­வங்­க­ளை­யும் ஒடுக்க ராணு­வம் கள­மி­றக்­கப்­பட்­டுள்­ளது.

அதோடு இம்­ரான் கான் கட்சி­ யைச் சேர்ந்த மூத்த தலை­வர்­களும் நேற்று கைது செய்­யப்­பட்­ட­னர்.

பாகிஸ்­தான் டெஹ்­ரீக்-இ-இன்­சாஃப் (பிடிஐ) கட்­சி­யின் ஆசாத் உமர், ஷா மஹ்­முட் குரேஷி போன்ற மூத்த தலை­வர்­கள் வன்­மு­றைக­ளைத் தூண்­டி­ய­தற்­காக கைது செய்­யப்­பட்­ட­னர் என்று இஸ்­லா­மா­பாத் காவல்­துறை ­தெரி­வித்­தது.

கடந்த செவ்­வாய்க் கிழமை நீதி­மன்ற விசா­ர­ணைக்கு வந்த முன்­னாள் பிர­த­மர் இம்­ரான் கான் அதி­ர­டி­யா­கக் கைது செய்­யப்­பட்­டார்.

இதை­ய­டுத்து நாடு முழு­வ­தும் கல­வ­ரம் வெடித்­தது. அவ­ரது ஆத­ர­வா­ளர்­கள் தொடர்ந்து வன்­மு­றை­யில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். கடந்த மூன்று நாட்­க­ளாக கைப்­பேசி இணை­யத் தொடர்­பும் துண்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

ராணு­வக் கட்­ட­டங்­க­ளுக்­குள்­ளும் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் நுழைந்து ஆர்ப்­ப­ரித்­த­னர். லாகூ­ரில் உள்ள ராணுவ ஜென­ர­லின் வீட்­டை­யும் அவர்­கள் சூறை­யா­டி­னர்.

இதர மாநி­லங்­களில் உள்ள அர­சாங்­கக் கட்­ட­டங்­க­ளை­யும் தாக்கி தீயிட்­டுக் கொளுத்­தி­னர். இத­னால் 220 மில்­லி­யன் மக்­கள்­தொகை கொண்ட நாட்­டின் நிலைத்­தன்மை பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

இது­வரை மோதல்­களில் குறைந்­தது எட்­டுப் பேர் உயி ரிழந்­தி­ருக்­க­லாம் என்று உள்­ளூர் ஊட­கங்­களை மேற்­கோள்­காட்டி 'த இண்­டி­யன் எக்ஸ்­பி­ரஸ்' தெரி­வித்­தது.

இதற்­கி­டையே நாட்­டில் சட்ட ஒழுங்கை நிலை­நாட்ட ராணு­வத்தை கள­மி­றக்க வேண்­டும் என்று பாகிஸ்தானில் உள்ள பஞ்­சாப் உள்­ளிட்ட மாநி­லங்­கள் விடுத்த கோரிக்­கையை மத்­திய அரசு ஏற்­றுக் கொண்­டது. இதை­ய­டுத்து நேற்று இஸ்­லா­மா­பாத் நகரை நோக்கி ராணு­வம் சென்­றது. திரு கானின் சொந்த மாநி­ல­மான பஞ்­சா­பில் மட்­டும் வன் முறை­யில் ஈடு­பட்­ட­தற்­காக 1,300க்கும் மேற்­பட்­ட­வர்­களை காவல்­து­றை­யி­னர் கைது செய்­துள்­ள­னர்.

சென்ற 2002 ஏப்­ரல் மாதம் நாடா­ளு­மன்­றத்­தில் நம்­பிக்கை இல்லாத் தீர்­மா­னம் கொண்­டு­வந்­த­போது இம்­ரான் கானின் ஆட்சி கவிழ்ந்­தது.

அதன் பிறகு அவர் மீது சர­மா­ரி­யாக ஊழல் குற்­றச்­சாட்­டு­கள் கொண்டு வரப்­பட்­டன. அர­சாங்­கத்­துக்கு வழங்­கப்­பட்ட பரி­சுப் பொருள்­களை சட்­ட­வி­ரோ­த­மாக விற்­ற­தும் அவற்­றில் அடங்­கும். கைது செய்­யப்­பட்ட இம்­ரான் கான் எட்டு நாள் காவ­லில் வைக்­கப்­ப­டு­வார் என எதிர்­பார்க்­கப் படு­கிறது.

இதற்­கி­டையே இம்­ரான் கான் கைது செய்­யப்­பட்ட பிறகு முதல் முறை­யாக பேசிய பிர­த­மர் ஷெபாஸ் ஷரீஃப், பிடிஐ தலை­வ­ருக்கு எதி­ராக அனைத்து ஆதா­ரங்­கள் இருப்­ப­தா­க­வும் அவற் றின் அடிப்­ப­டை­யில் என்­ஏபி விசா­ரணை நடத்தி வரு­வ­தா­க­வும் தெரி­வித்­தார்.