உளவு பலூன்: அமெரிக்க-சீன உயர்நிலைச் சந்திப்பு

உளவு பலூன்: அமெரிக்க-சீன உயர்நிலைச் சந்திப்பு

1 mins read
7b886cbf-cb51-46ff-8fa0-3373269a58b4
-

வாஷிங்­டன்: அமெ­ரிக்­கா­வின் தேசி­யப் பாது­காப்பு ஆலோ­ச­கர் ஜேக் சலி­வன், சீன அர­ச­தந்­திரி வாங் யி இரு­வ­ரும் வியன்­னா­வில் சந்­தித்­துப் பேசி­யுள்­ள­னர்.

நேர்­மை­யான, ஆக்­க­க­ர­மான முறை­யில் பேச்சு நடத்த அவர்­கள் சந்­தித்­த­தாக வெள்ளை மாளிகை தக­வல் வெளி­யிட்­டுள்­ளது.

இவ்­வாண்­டுத் தொடக்­கத்­தில் உளவு பலூன் தொடர்­பில் இரு நாடு­க­ளுக்­கும் இடையே பிணக்கு ஏற்­பட்­ட­தற்­குப் பிறகு இத்­த­கைய உயர்நிலைப் பேச்சு நடை­பெற்­றது இதுவே முதல்­முறை.

புதன்­கி­ழ­மை­யும் வியா­ழக்­கி­ழ­மை­யும் இடம்­பெற்ற சந்­திப்­பில் இரு­த­ரப்பு உறவு, உலக அள­வி­லும் வட்­டா­ரத்­தி­லும் நில­வும் பாது­காப்­புப் பிரச்­சி­னை­கள் ரஷ்­யா­வுக்­கும் உக்­ரே­னுக்­கும் இடை­யி­லான போர் போன்­றவை குறித்து பேசப்­பட்­ட­தா­கத் தெரி­கிறது.