பிரிட்டனில் 46 ஆண்டில் ஆக அதிகமான உணவு விலை

பிரிட்டனில் 46 ஆண்டில் ஆக அதிகமான உணவு விலை

1 mins read
e4ff7497-2c4d-44cc-b40f-9017faeebf97
-

லண்டன்: பிரிட்டனில் கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவுப் பொருள்களின் விலை உயர்ந்திருப்பதை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று விசாரணையைத் தொடங்கியுள்ளனர். உற்பத்தி முதல் நுகர்தல் வரையிலான கட்டங்களில் லாபம் எவ்வாறு பகிரப்படுகிறது என்பது குறித்து ஆராயப்படும். இறக்குமதியாகும் உணவு, விளைபொருள்களுக்கான உலகளாவிய விலை போன்றவை விநியோகச் சங்கிலியில் ஏற்படுத்தும் தாக்கமும் கருத்தில் கொள்ளப்படும் எனக் கூறப்பட்டது. நிலைமையைச் சாதகமாக்கிக்கொண்டு லாபம் பார்ப்பதாகக் கூறப்படுவதை பேரங்காடிகள் மறுத்துள்ளன. இவ்வேளையில் பால், ரொட்டி போன்றவற்றின் விலை சற்றே குறையத் தொடங்கி உள்ளதாகத் தெரிகிறது.