சுவிட்சர்லாந்தின் பிரீன்ஸ் எனும் மலை கிராமத்தில் இருந்து வெளியேறும்படி அங்குள்ள மக்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மலைச்சரிவால் அக்கிராமம் புதையுண்டு போகலாம் என அஞ்சப்படுவது அதற்குக் காரணம். மலை உச்சியில் கடுமையான பனிமூட்டம் காணப்படும் வேளையில் மலையில் உள்ள மரம், செடிகளை சேறும் பாறைகளும் முற்றிலும் மறைத்துள்ளன. மலையில் இருந்து இரண்டு மில்லியன் கன மீட்டர் அளவுள்ள பாறை உருண்டு வந்து அடிவாரத்தில் உள்ள வீடுகளைச் சேதப்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 100 பேர் வசிக்கும் பிரீன்ஸ் கிராமத்தில் இருந்து கால்நடைகளுடன் சிலர் வெளியேறத் தொடங்கியுள்ளனர். படம்: இபிஏ
புதையுண்டு போகுமென அஞ்சப்படும் மலை கிராமம்
1 mins read
-

