முன்னெப்போதும் இல்லாத அளவில் உக்ரேனுக்கு உதவி

முன்னெப்போதும் இல்லாத அளவில் உக்ரேனுக்கு உதவி

1 mins read
5bd6d427-a250-4ad6-b925-7f91681ebc38
-

பெர்­லின்: உக்­ரே­னுக்கு முன்­னெப்­போ­தும் இல்­லாத அளவில் ஜெர்­மனி ஆக அதி­க­மாக 2.7 பில்­லி­யன் யூரோ (S$3.95 பில்­லி­யன்) பெறு­மா­ன­முள்ள ஆய­தங்­களை அனுப்பி வைக்­கப்­போ­வ­தாக அறி­வித்­துள்­ளது.

ரஷ்­யா­வுக்கு எதி­ரா­கப் போரிட்டு வரும் உக்­ரே­னுக்குத் தேவை இருக்­கும் வரை மேலும் பல ஆத­ர­வு­கள் வழங்­கப்­படும் என்­றும் அது உறுதி அளித்­தது.

உக்­ரே­னுக்கு ஜெர்­மனி அனுப்பி­வைக்க இருக்­கும் ஆயு­தங்­களில் 30 லெபர்ட் 1 கவ­ச­வா­க­னங்­கள், எதி­ரி­க­ளின் போர் விமா­னங்­க­ளைச் சுட்டு வீழ்த்­தக்­கூ­டிய 15 ஜெபார்ட் கவ­ச­வாகனங்­கள், உள­வுப் பார்க்க பயன்­ப­டுத்­தப்­படும் 200க்கும் மேற்­பட்ட ஆளில்லா வானூர்­தி­கள் ஆகி­யவை அடங்­கும்.

இந்­தத் தக­வலை ஜெர்­மன் தற்­காப்பு அமைச்சு நேற்று வெளி­யிட்­டது.

"இந்த மிக மோச­மான, சட்­ட­வி­ரோத போர் விரை­வில் முடி­வுக்கு வர வேண்­டும் என்று விரும்­பு­கி­றோம். ஆனால் போர் கூடிய விரை­வில் முடி­யும் என்று எங்­க­ளுக்­குத் தோன்­ற­வில்லை. எனவே, தேவை இருக்­கும் வரை ஜெர்­மனி உதவி செய்­யும்," என்று ஜெர்­மன் தற்­காப்பு அமைச்­சர் பாரிஸ் பிஸ்­டோ­ரி­யஸ் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே, உக்­ரே­னிய அதி­பர் வொலோ­டி­மி­யர் ஸெலன்ஸ்கி நேற்று இத்­தாலியத் தலை­ந­கர் ரோம் சென்­ற­டைந்­தார்.

அதி­பர் ஸெலன்ஸ்­கியை வர­வேற்க ரோமில் வாழும் உக்­ரே­னி­யர்கள் சாலை நெடு­கி­லும் மிகுந்த ஆர்­வத்­து­ட­னும் உக்­ரே­னிய கொடியை ஏந்­திக்­கொண்­டும் காத்­துக்­கொண்­டி­ருந்­த­னர். உக்­ரே­னுக்கு ஆத­ர­வான வாச­கங்­க­ளைக் கொண்ட பதா­கை­களை­யும் அவர்­கள் ஏந்­தி­னர்.

இத்­தா­லி­யத் தலை­வர்­களு­டன் கலந்­து­ரை­யா­டி­விட்டு பிறகு

வாத்­திக்­கன் நக­ருக்­குச் சென்று போப்­பாண்­ட­வரை திரு ஸெலன்ஸ்கி சந்­தித்­துப் பேச இருப்­ப­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்டது.