பிணை கிடைத்தது, வீடு திரும்பிய இம்ரான் கான்

1 mins read
bcf83ee8-b293-4941-89b3-3fdfdc4de41a
-

லாகூர்: பாகிஸ்­தானின் முன்­னாள் பிர­த­மர் இம்­ரான் கான் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டார். லாகூ­ரில் உள்ள தமது வீட்டை இம்­ரான் கான் நேற்று சென்­ற­டைந்­தார்.

அண்­மை­யில் அவர் நீதி­மன்­றத்­துக்­குச் சென்று கொண்­டி­ருந்­த­போது நீதி­மன்ற வளா­கத்­தி­லேயே கைது செய்­யப்­பட்­டார்.

அவர் ஊழ­லில் ஈடு­பட்­ட­தா­கக் கூறி அதி­கா­ரி­கள் அவ­ரைத் தடுத்து வைத்­த­னர்.

அத­னைத் தொடர்ந்து, இம்­ரான் கானின் கட்­சி­யினர் நாடெங்­கும் கல­வ­ரத்­தில் ஈடு­பட்­ட­னர்.

இந்­நி­லை­யில், இம்­ரான் கானை எந்த வழக்கு தொடர்­பா­க­வும் வரும் திங்­கட்­கி­ழ­மைக்கு முன்பு கைது செய்­யக்­கூ­டாது என்று இஸ்­லா­மா­பாத் உயர் நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

கடந்த ஆண்டு ஏப்­ரல் மாதம் இம்­ரான் கான் தமது பிர­த­மர் பத­வியை இழந்­த­தி­லி­ருந்து அவர் மீது பல குற்­றச்­சாட்­டு­கள் அடுக்­க­டுக்­காக வைக்­கப்­ப­டு­கின்­றன.

"பாகிஸ்­தா­னி­லேயே ஆகப் பெரிய கட்­சி­யின் தலை­வ­ரான நான், உயர் நீதி­மன்ற வளா­கத்­தி­லி­ருந்து அனை­வ­ரின் கண் முன் கடத்­தப்­பட்­டேன்.

"என்னை அதி­கா­ரி­கள் பயங்­க­ர­வா­தி­யைப் போல நடத்­தி­னர். அதிகாரிகளின் இந்த முறையற்ற செயலை எதிர்த்து நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்," என்று பிணை­யில் விடுவிக்கப்பட்டதும் பிறகு ஏஎ­ஃப்பி செய்தி நிறு­வ­னத்­தி­டம் இம்­ரான் கான் அதி­ருப்­திக் குரல் எழுப்­பி­னார்.