காஸா: காஸாவில் உள்ள இஸ்லாமியப் போராளி அமைப்புகளைக் குறிவைத்து இஸ்ரேலியப் போர் விமானம் நேற்று அங்கு தாக்குதல் நடத்தியது.
அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாலஸ்தீனப் போராளிகள் இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளைப் பாய்ச்சினர்.
கடந்த சில நாள்களாக இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனப் போராளிகளுக்கும் இடையிலான பகைமை மேலும் மோசமடைந்து கடுமையான வன்முறை வெடித்துள்ளது.
இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி போர் நிறுத்தத்தைக் கொண்டு வர எகிப்து முயற்சி செய்து வருகிறது.
ஆனால் அதன் முயற்சி தோல்வியில் முடியக்கூடும் என்று உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.
நேற்று நடைபெற்ற சண்டையில் குறைந்தது 33 பாலஸ்தீனர்களும் ஒரு இஸ்ரேலியரும் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனப் போராளிகளுக்கும் இடையிலான இந்த மோதலில் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து 140க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களும் குறைந்தது 19 இஸ்ரேலியர்கள், வெளிநாட்டினர் மாண்டுவிட்டனர்.

