லாகூர்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், 'சுதந்திரம்' என்ற கருப்பொருளில் இன்று நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இம்ரான் கான் கடந்த வாரம் ஊழல் வழக்கு தொடர்பாக ராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தார். பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை அவர் இரண்டுவார கால பிணையில் விடுவிக்கப்பட்டார். அவர் தடுத்துவைக்கப்பட்டிருந்தற்கு எதிராக நாட்டில் பெரும் பதற்றமும் கொந்தளிப்பும் ஏற்பட்டது.
இந்நிலையில், இம்ரான் கான், யூடியூப் வாயிலாக தனது ஆதரவாளர்களுக்காக காணொளி ஒன்றைப் பதிவேற்றியுள்ளார். அதில், "சுதந்திரம் எளிதாகக் கிடைத்துவிடாது. அதை நாம் தான் போராடிப் பெற வேண்டும். சுதந்திரத்தைப் பெறுவதற்கு நீங்கள் தியாகம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அனைவரும் உங்களின் சொந்த ஊர்களின் தெருக்களின் முனையில் போராட்டத்தில் ஈடுபடவேண்டும் என்று அவர் அந்த காணொளியில் கேட்டுக்கொண்டுள்ளார்.


