மோக்கா புயல் தாக்கும் அபாயத்தில் மியன்மார், பங்ளாதேஷ்

மோக்கா புயல் தாக்கும் அபாயத்தில் மியன்மார், பங்ளாதேஷ்

1 mins read

மியன்மார்: சக்திவாய்ந்ததாகக் கருதப்படும் மோக்கா புயல் மியன்மாரில் இன்றைக்குள் கரையைக் கடக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து அந்நாடுகளில் கடற்கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் 3,000க்கு மேற்பட்டோர் பாதுகாப்பு முகாம்களை நாடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோச்சா புயல் காக்ஸ் பஜாருக்கு இடையில் வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து பங்ளாதேஷின் தென்கிழக்குப் பகுதிக்கும் மியான்மாருக்கு இடையே இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று கணிக்கப்பட்டிருந்தது.

மோச்சா புயல் கரையை கடக்கத் தொடங்கியுள்ளதால் பங்ளாதேஷ், மியன்மார் ஆகிய நாடுகளுக்கு இடையே உள்ள கடலோர மாவட்டங்களில் கனமழையுடன் பலத்த காற்று வீசும் என்று கூறப்படுகிறது. மேலும், பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.