உக்ரேன் எல்லைப் பகுதியில் ரஷ்ய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன

உக்ரேன் எல்லைப் பகுதியில் ரஷ்ய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன

1 mins read

மாஸ்கோ: ரஷ்யாவின் இரண்டு போர் விமானங்கள் மற்றும் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் ஆகியவை உக்ரேனிய எல்லைக்கு அருகே கடந்த சனிக்கிழமை சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்யாவின் கொம்மர்சேன்ட் என்னும் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்கள் எஸ்யூ-32 ரக போர் விமானம், எஸ்யூ-35 ரக போர் விமானங்களாகும். வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்கள் இரண்டும் எம்ஐ-8 ரக ஹெலிகாப்டர்களாகும். இந்தச் சம்பவம், பிரியன்ஸ்க் வட்டாரத்தின் உக்ரேனின் வடகிழக்குப் பகுதியில் நிகழ்ந்தது என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

முதற்கட்ட விசாரணையில், சுட்டுவீழ்த்தப்பட்ட விமானங்கள், ஆயுதங்களையும் வெடிகுண்டுகளையும் ஏற்றிச் சென்றதாகத் தெரிகிறது. உக்ரேனின் செர்னிஹிவ் வட்டாரத்தில் தாக்குதலை நடத்துவதற்காக அந்த ஆயுதங்களை கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்