பேங்காக்: தாய்லாந்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது. இம்முறை அதிகமானவர்கள் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த 2014ஆம் ஆண்டில் ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய தற்போதைய பராமரிப்பு அரசாங்கத்தின் பிரதமரும் முன்னாள் ராணுவத் தளபதி யுமான பிரயுத் சான்-ஒ-சா, 69, மீண்டும் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
ராணுவ ஆதரவு பெற்ற ஐக்கிய தாய்லாந்து தேசிய கட்சியின் சார்பில் அவர் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார்.
ஆட்சிக் கவிழ்ப்பில் ஆட்சியைப் பறிகொடுத்த பியூ தாய் கட்சி அவருக்கு எதிராக போட்டி யிடுகிறது.
அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர்களான அறுபது வயது ஸிரேத்தா தவிசினும் 36 வயது வர்த்தக நிர்வாகியும் நாடோடியாக சுற்றும் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் மகளுமாகிய பேடோங்டர்ன் ஷினவத்ரா உள்ளிட்டோர் கடந்த வாரம் முழுவதும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குகளை சேகரித்தனர்.
இக்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்றும் ராணுவ ஆட்சிக்கு முடிவு ஏற்படும் என்றும் உள்ளூர் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதே கட்சியின் சார்பாக முன்னாள் தலைமைச் சட்ட அதிகாரியான 74 வயது சைகாசெம் நிட்டிசிறியும் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
நேற்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் திரு ஸிரேத்தா வாக் களித்தார்.
ஒரு மணி நேரத்துக்குப் பிறகு திரு பிரயுத்தும் தனது வாக்கைப் பதிவுசெய்தார்.
தொடர்புடைய செய்திகள்
"இன்று தாய்லாந்துக்காரர் களுக்கு முக்கியமான நாள். எல்லோரும் வெளியே வந்து வாக்களிக்க வேண்டும்," என்று திரு ஸிரேத்தா செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.
திரு பிரயுத்தும் இதே போன்ற செய்தியை வெளியிட்டிருந்தார்.
தாய்லாந்தில் 52 மில்லியன் பேர் வாக்களிக்க தகுதிபெற்று உள்ளனர்.
நேற்று மாலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது முக்கிய எதிர்க்கட்சி முன்னிலையில் இருந்தது.
மாலை 7.30 மணி அளவில் மூன்று விழுக்காடு வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்ட நிலையில் பியூ தாய் கட்சியும் மூவ் ஃபார் வர்ட் கட்சியும் மாறி மாறி முன்னிலை வகித்தன.
ஆளும் கட்சி சிறிதளவு பின்தங்கி 3வது இடத்தில் இருந்தது.