கோலாலம்பூர்: நாட்டின் 15வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு ஐக்கிய அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சிகளுக்கு இடையிலான போட்டி முடிவுக்கு வந்துவிட்டது என்று மலேசிய சீனர் சங்கத்தின் தலைவர் டாக்டர் வீ கா சியோங் நேற்று தெரிவித்தார்.
"தற்போது நாட்டை முன்னெடுத்து செல்வதே முக்கியம்," என்று உலக வர்த்தக நிலையத் தில் நடைபெற்ற ஐக்கிய அரசாங்கத்தின் மாநாட்டில் அவர் வலியுறுத்தினார். அரசியல் கட்சிகள் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். நாட்டுக்குத் தீங்கு விளைவிக்கும் அரசியல்களை நிறுத்த வேண்டும். தற்போதைய அரசியல் 90களிலிருந்து மாறுபட்டது. அரசியல் கட்சியின் அடையாளம் மட்டும் பார்க்கப்படுவதில்லை என்ற வீ கா சியோங், ஒரு காலத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் தற்போது நண்பர்களாகிவிட்டனர் என்று பெருத்த ஆரவாரங்களுக்கு இடையே தெரிவித்தார். மலேசியாவில் அனைத்து இனங் களுக்கு இடையே நெருக்கமான உறவை உருவாக்குவது முக்கியம் என்றும் அவர் சொன்னார். "பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மக்கள் மற்றும் 19 கட்சிகளின் உறுதியான ஆதரவு இருப்பதால், அவர் தொடர்ந்து முன்னேறிச் செல்ல வேண்டும்," என்று அஹ்மட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

