லாகூர்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நாடு தழுவிய போராட்டங்களுக்கு நேற்று அழைப்பு விடுத்தார்.
"சுதந்திரம் எளிதில் வந்து விடாது. நாம்தான் தட்டிப் பறிக்க வேண்டும். அதற்காக தியாகம் செய்ய வேண்டும்," என்று சனிக்கிழமை இரவு யூடியூபில் பதிவிட்ட காணொளியில் அவர் கேட்டுக் கொண்டார்.
உடனடி தேர்தல் நடத்து வதற்கான பிரசாரத்தை புதன் கிழமை மீண்டும் தொடங்கப் போவதாகவும் அவர் அறிவித்தார்.
இதற்கிடையே வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் உத்தரவிட்டு உள்ளார்.

