செய்திக்கொத்து

1 mins read
39f67bbb-93c1-4876-b661-9b6cfb9a6aba
-

அம்னோவின் புதிய ஆலோசகர்

கோலாலம்பூர்: மலேசிய அம்னோ கட்சி, அக்கட்சித் தலைவர் அஹமட் ஸாஹிட் ஹமிடியின் பரிந்துரைப்படி ரஸலீக் ஹம்சாவை கட்சியின் ஆலோசகராக நியமித்துள்ளது. இதனை அம்னோ உச்சமன்ற உறுப்பினரான அஹமட் மஸ்லானும் உறுதிப்படுத்தி யிருக்கிறார். மற்றொரு நிலவரத்தில் அரசியல் நியமனம் பெற்றவர்கள் குறித்து விமர்சித்ததற்காக அமானா கட்சியிடம் அம்னோ இளையர் அணித் தலைவர் முஹமட் அக்மால் சாலே மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

கடலில் பிலிப்பீன்ஸ் மிதவைகள்

மணிலா: பிலிப்பீன்ஸ் அரசாங்கம், தென்சீனக் கடலில் உள்ள சர்ச்சைக்குரிய ஸ்ப்ராட்லி தீவு மீதான உரிமையை நிலைநாட்டுவதற்காக தனது பிரத்யேக பொருளியல் வட்டாரத்திற்குள் மிதவைகளை அமைத்துள்ளது. தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு இடையே பிலிப்பீன்ஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் சமாதானம்

காசா: இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே ஐந்து நாள் சண்டைக்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. எகிப்தின் தொடர்ச்சியான முயற்சியால் இந்த ஒப்பந்தம் சாத்தியமானது.