'சூப்பர் பைக்' ஓட்டும் கனவை நனவாக்கிய பக்கவாத நோயாளி

'சூப்பர் பைக்' ஓட்டும் கனவை நனவாக்கிய பக்கவாத நோயாளி

1 mins read
335d5aeb-2a1c-421b-8891-3fc56bd1af46
-

லண்­டன்: திரு­வாட்டி கிளேர் லோமாஸ் எனும் 43 வய­துப் பெண் 2007ல் குதி­ரைச் சவா­ரி­யின்­போது ஏற்­பட்ட விபத்­தைத் தொடர்ந்து பக்­க­வா­தத்­தால் பாதிக்­கப்­பட்­டார்.

நெஞ்­சுக்­குக்­கீழ் அவ­ரது உடல் செயல்­தி­றனை இழந்­தது. இருப்­பி­னும் மாற்­றி­ய­மைக்­கப்­பட்ட மோட்­டார் சைக்­கிள் ஒன்­றில் சென்ற சனிக்­கி­ழமை அவர் பய­ணம் செய்­த­து­டன் நன்­கொடை­யும் திரட்­டி­னார்.

வட அயர்­லாந்­தில் அவர் அச்­சா­த­னையை நிகழ்த்­தி­னார்.

24.4 கிலோ­மீட்­டர் நீள­முள்ள பந்­த­யப் பாதை­யில் திரு­வாட்டி லோமாஸ் மணிக்கு 135 கிலோ­மீட்­டர் எனும் வேகம் வரை வாக­னத்­தைச் செலுத்­தி­னார்.

அத்­து­டன், தண்­டு­வ­டக் காயங்­க­ளுக்கு உத­வும் அற­நி­று­வ­னத்­திற்கு ஏறக்­கு­றைய $7,365 நன்­கொடை திரட்­டி­னார்.

இதற்கு முன்­னர் திரு­வாட்டி லோமாஸ், மோட்­டார் சைக்­கிள் ஓட்­டி­ய­தில்லை. 'சூப்­பர் பைக்' ஓட்­டிய அனு­ப­வம் தமக்கு மிக­வும் உற்­சா­க­மாக இருந்­த­தா­க­வும் முன்­னர் விபத்து நடந்­த­போது இவ்­வாறு கற்­பனை செய்து­கூட பார்க்­க­வில்லை என்­றும் அவர் கூறி­ய­தாக பிபிசி செய்தி நிறு­வ­னம் கூறி­யது.

2012, 13ஆம் ஆண்­டு­களில் பெரு­நடை, கையால் செலுத்­தும் மிதி­வண்டி என சாக­சச் செயல்­களில் அவர் ஈடு­பட்­ட­துண்டு.