துருக்கிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதில் இழுபறி

துருக்கிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதில் இழுபறி

1 mins read
5b5302be-9854-4bed-9670-a0f4c63dcf9d
-

அங்­காரா: துருக்­கி­யில் நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற அதி­பர் தேர்­த­லில் எந்­தத் தரப்­பிற்­கும் அறு­திப் பெரும்­பான்மை கிடைக்­கா­த­தால் அங்கு இரண்­டாம் சுற்று வாக்­கெ­டுப்பு நடை­பெ­றும் எனத் தெரி­கிறது.

அதி­பர் ரிசெப் தயிப் எர்­டு­வான் அவரை எதிர்த்­துக் கள­மி­றங்­கிய கெமால் கிளிச்­டொ­ரோ­லு­வைக் காட்­டி­லும் அதிக வாக்­கு­க­ளைப் பெற்­றா­லும் தெளி­வான பெரும்­பான்­மை­யைப் பெற­வில்லை. தேர்­த­லில் 50 விழுக்­காட்டு வாக்­கு­க­ளைப் பெற்­றால்­தான் அதி­பர் பத­வி­யைப் பிடிக்க முடி­யும் என்ற நிலை­யில் திரு எர்­டு­வான் ஏறக்­கு­றைய 49 விழுக்­காட்டு வாக்­கு­க­ளை­யும் திரு கெமால் ஏறத்­தாழ 45 விழுக்­காட்டு வாக்­கு­க­ளை­யும் பெற்­றுள்­ள­னர்.

துருக்­கி­யில் நான்கு தவ­ணை­க­ளாக 20 ஆண்­டு­கள் ஆட்சி செலுத்­தி­யுள்ள திரு எர்­து­வான் ஐந்­தாம் தவ­ணை­யி­லும் ஆட்சி செய்­வேன் என்­கி­றார். திரு கெமால், இரண்­டாம் சுற்று வாக்­கெ­டுப்­பில் தாம் வெற்றி பெறு­வது உறுதி என்­கி­றார்.

இரண்­டாம் சுற்று வாக்­கெ­டுப்பு இம்­மா­தம் 28ஆம் தேதி நடை­பெ­றும் என எதிர்­பார்க்­கப்­படு­கிறது.