கடலுக்கடியில் 74 நாள்: புதிய சாதனை படைத்த ஆய்வாளர்

கடலுக்கடியில் 74 நாள்: புதிய சாதனை படைத்த ஆய்வாளர்

1 mins read
aea120b5-1833-4c0e-944a-4bf7c87c1787
-

அமெ­ரிக்கா: அமெ­ரிக்­கப் பேரா­சி­ரி­யர் டாக்­டர் ஜோசஃப் டிட்­டுரி கட­லுக்­க­டி­யில் நீண்ட நாள் வசித்த புதிய சாத­னையை சென்ற சனிக்­கி­ழமை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளார்.

ஜூல்ஸ் கட­ல­டித் தங்­கு­வி­டு­தி­யில் அவர் தங்­கி­யி­ருந்த 74ஆம் நாள் அது.

ஃபுளோரி­டா­வில் ஒன்­பது மீட்­டர் ஆழத்­தில் உள்ள உப்­பங்­க­ழித் தீவு ஒன்­றில் அமைந்­துள்­ளது முக்­கு­ளிப்­பா­ளர்­க­ளுக்­கான அவ்­வி­டுதி.

கட­ல­டி­யில் 100 நாள்கள் தங்கு­வது டாக்­டர் ஜோச­ஃபின் திட்­டம். அங்­குள்ள அதீத அழுத்­தத்தை மனித உடல் எவ்­வாறு கையாள்­கிறது என அறிவது அவ­ரது ஆய்வு.

அங்­கி­ருந்­த­ப­டியே பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்கு இணை­யத்­தில் வகுப்பு எடுக்­கும் அவரை நண்­பர்­கள், குடும்­பத்­தி­னர், மருத்து­வர்­கள் அவ்­வப்­போது சென்று பார்த்து வரு­கின்­ற­னர்.

அன்­றா­டம் ஒரு மணி நேரம் தனது இருப்­பி­டத்­தைச் சுற்றி முக்­கு­ளிக்­கும் அவர் மேற்­ப­ரப்­புக்கு வரு­வதே இல்லை. கட­ல­டி­யில் வசிப்­பது மிக­வும் பிடித்­துள்­ளது என்று கூறும் டாக்­டர் ஜோசஃப், சூரி­ய­னைப் பார்க்க முடி­வ­தில்லை என்­பது மட்­டுமே தனது வருத்­தம் என்­கி­றார். கட­லடி ஆய்வைத் தொடங்குமுன் சூரிய உத­யத்­தைப் பார்ப்­பது அவ­ரது அன்­றா­டக் கட­மை­களில் ஒன்று.