நியூசிலாந்து தங்குவிடுதியில் தீ; குறைந்தது அறுவர் மரணம்

நியூசிலாந்து தங்குவிடுதியில் தீ; குறைந்தது அறுவர் மரணம்

2 mins read
f92af26f-a1b1-40a5-8789-9c88c96d93c6
-

வெல்லிங்டன்: நியூ­சி­லாந்­தின் ெவல்­லிங்­டன் நக­ருக்கு அரு­கில் 'லோஃபர்ஸ் லாட்ஜ்' என்ற தங்­கு­வி­டு­தி­யில் திங்­கள்­கி­ழமை பின்­னி­ர­வில் ஏற்­பட்ட தீ விபத்­தில் குறைந்­தது அறு­வர் மர­ண­

ம­டைந்­துள்­ள­னர்.

மேலும் 11 பேரைக் காண­வில்லை என்­றும் மாண்­டோர் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கக்­

கூ­டும் என்றும் அந்­நாட்டு அதி­கா­ரி­கள் தெரி­விக்­கின்­ற­னர். 'லோஃபர்ஸ் லாட்ஜ்' ஆக மேல் மாடி­யில் திங்­கள் நள்­ளி­ரவு தீ ஏற்­பட்­ட­தாக காவல் துறை அதி­கா­ரி­கள் கூறு­கின்­ற­னர்.

தீயால் கட்­ட­டத்­தின் கட்­ட­மைப்­புக்கு சேதம் ஏற்­­பட்­டுள்­ள­தால் மீட்­புப் பணி­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அவர்­கள் விளக்­கி­னர்.

அந்­தக் கட்­ட­டத்­தில் கிட்­டத்­தட்ட 90 பேர் தங்­கி­யி­ருந்த நிலை­யில், தீயை அணைக்க 80 தீய­ணைப்பு வீரர்­களும் 20 கன­ரக வாக­னங்­களும் ஈடு­ப­டுத்­தப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதில் காவல் துறை, அவ­சர மீட்­புப் படை­யைச் சேர்ந்­தோர் 52 பேரை மீட்­டுள்­ள­தாக செய்­தித் தக­வல்­கள் கூறு­கின்­றன.

மேலும் 15 பேருக்கு சம்­பவ இடத்­தில் சிகிச்சை அளிக்­கப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கிறது.

கட்­ட­டத்­தின் கூரை­யில் சிக்கி செய்­வ­த­றி­யாது இருந்­த­வர்­களை மீட்க தீய­ணைப்பு வீரர்­கள் கன­ரக வாக­னத்­தில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட ஏணி­யின் உத­வி­யு­டன் மீட்­ட­தாக அவ­சர மீட்­புப் படை தள­பதி பிரண்­டன்­நாலி தெரி­வித்­தார்.

"தீ மூண்ட இடத்­துக்கு மேலே, கூரைப் பகு­தி­யில் சிக்­கி­ய­வர்­களை மீட்­புப் படை­யி­னர் பாது­காப்­பாக காப்­பாற்­றி­னர்,

"வேறு வழி­யில்லை, எங்­கள் குழு­வி­னர் காப்­பாற்­ற­வில்லை என்­றால் அவர்­கள் அழி­வது நிச்­ச­யம்.

"மீட்­புப் படை­யி­னர் காப்­பாற்­றி­ய­தால்­தான் பலர் தற்­பொ­ழுது நட­மா­டிக்கொண்­டி­ருக்­கி­னர்," என்று ரேடியோ நியூ­சி­லாந்­துக்கு அளித்த பேட்­டி­யில் திரு நாலி விளக்­கி­னார்.

தீயை அணைக்க உத­வும் நீர்த் தெளிப்பு வச­தி­யும் இல்லை, தீ எச்­ச­ரிப்பு கரு­வி­யும் உட­ன­டி­யாக வேலை செய்­ய­வில்லை என்று திரு நாலி தெளி­வு­ப­டுத்­தி­னார்.

தங்­கு­வி­டு­தி­யில் இருந்த கிறிஸ் எனப் பெயர் கொண்ட ஒரு­வர், தனது அறை­யில் ஏற்­பட்ட கடு­மை­யான புகை­மூட்­டத்­தில் இருந்து தப்­பிக்க தான் தனது அறையை விட்டு தவழ்ந்து வெளி­யே­றி­ய­தா­க நியூ­நி­லாந்து தொலைக்­காட்­சிக்கு அளித்த பேட்­டி­யில் தெரி­வித்­தார்.

இந்­தச் சம்­ப­வம் பற்­றிக் கருத்­து­ரைத்த நியூ­சி­லாந்து பிர­த­மர் கிறிஸ் ஹிப்­கின்ஸ், இது ஒரு பெரும் துயர் சம்­ப­வம் என்று கூறி­னார்.

அந்­தத் தங்­கு­வி­டு­தி­யில் பல பகு­தி­நேர ஊழி­யர்­கள் தங்­கி­யி­ருந்­த­தால் தீ மூண்ட சம­யம் தங்­கு­வி­டு­தி­யில் இருந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை சரி­யா­கத் தெரி­ய­வில்லை என்று நியூ­சி­லாந்­துப் பிர­த­மர் கூறி­னார்.

"இந்­தத் தீச் சம்­ப­வம் பத்­தாண்­டு­களில் ஒரு முறை வரக்­கூ­டிய தீச் சம்­ப­வம்.

"இது மிக­வும் மோச­மான சிம்­ம­சொப்­ப­னம்," என்று நியூ­சி­லாந்து தீய­ணைப்பு, அவ­சர உத­விப் படைத் தலைவர் நிக் பயட் அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­தார்.

"இதில் தொடர்­பு­டைய அனை­வ­ருக்­கும் இது ஒரு பெரும் துய­ர­மான சம்­ப­வம்.

"இந்­தத் துய­ரச் சம்­ப­வத்­தில் தங்­கள் அன்­புக்­கு­ரி­ய­வர்­களை இழந்­த­வர்­க­ளுக்கு எனது உள­மார்ந்த இரங்­க­லைத் தெரி­வித்­துக்கொள்­கி­றேன்.

தீயை அணைக்­க­வும், மக்­களை மீட்­க­வும் தீய­ணைப்­புப் படை­யி­னர் நம்­ப­மு­டி­யாத அள­வுக்கு தங்­கள் கட­மையை ஆற்­றி­னர். அவர்­க­ளுக்கு தனது பாராட்­டு­க­ளை­யும் நியூ­சி­லாந்­துப் பிர­த­மர் கிறிஸ் ஹிப்­கின்ஸ் தெரி­வித்­துக்கொண்­டார்.