பெய்ஜிங்: இவ்வாண்டில் முதல் முறையாக சீனாவின் பல பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதில் பல இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டின் பருவநிலை ஆய்வு ஆணையம் கூறியுள்ளது.
எல்நினோ எனப்படும் பருவநிலை மாற்றம் கிழக்கு பசிஃபிக் பெருங்கடல் பகுதியில் திரண்டு வருவதாகவும் இதனால் வெப்ப நிலை மிகவும் அதிகமாக இருக்கும் என்றும் ஆணையம் கூறியுள்ளது.
பெய்ஜிங், தியன்ஜின் பெருநகரங்கள், ஹெபெய், ஹெனான் மாநிலங்கள், ஸின்ஜியாங் உயகர் தன்னாட்சிப் பகுதி போன்ற இடங்களில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியசுக்கு மேல் செல்லும் என்று ஆணையம் கணித்துள்ளது.