பழத்திற்கு அடியில் பல மில்லியன் வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருள்

பழத்திற்கு அடியில் பல மில்லியன் வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருள்

1 mins read
6f88e833-3080-41ea-be6d-eb99f502b1e4
படம்: ஏஎஃப்பி -

இத்தாலியில் வாழைப்பழம் வைக்கும் பெட்டியில் கிட்டத்தட்ட 2,700 கிலோகிராம் அளவுக்கு போதைப்பொருள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சம்பவம் இத்தாலியின் தென் பகுதியில் உள்ள ஜாய்யா டரோவில் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

கடத்தல்காரர்கள் வாழைப்பழங்களுக்கு கீழ் யார் கண்ணுக்கும் தெரியாதபடி போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தனர்.

கப்பலில் அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது மோப்ப நாய்களின் உதவியாலும், வருடிகளாளும் பெட்டிக்குள் போதைப்பொருள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அர்மெனியாவுக்கு செல்லவிருந்த கப்பலில் அந்த போதைப்பொருள்கள் இருந்தன.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 1.2 பில்லியன் வெள்ளி.

சில நாள்களுக்கு முன்னர் இதே பாணியில் பழம் வைக்கும் பெட்டிக்குள் 600 கிலோ கிராம் எடை கொண்ட போதைப்பொருள் ஜாய்யா டரோவில் பிடிபட்டது.

அது இத்தாலி வழியாகப் பல ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்தப்படவிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்