'சமூக ஊடகங்கள் வழியாக சாதித்த மூவ் ஃபார்வர்ட் கட்சி'

'சமூக ஊடகங்கள் வழியாக சாதித்த மூவ் ஃபார்வர்ட் கட்சி'

2 mins read
85378818-ec98-441c-b475-e5fce56a1022
-

பேங்­காக்: சமூக ஊட­கங்­கள் வழி­யாக விளை­வு­களை ஏற்­ப­டுத்தி தேர்­த­லில் வெற்றி பெற்ற மூவ் ஃபார்வர்ட் கட்­சியை தாய்­லாந்­தின் செல்­வாக்­கு­மிக்க முன்­னாள் பிர­த­மர் தக்­சின் ஷின­வத்ரா பாராட்­டி­யுள்­ளார்.

பல ஆண்டு குழப்­பத்­திற்கு கார­ண­மான வய­தான ராணு­வத் தள­ப­தி­கள் கௌர­வ­மாக ஓய்வு பெற வேண்­டும் என்­று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடோ­டி­யாக அவர் வெளி­நாட்­டில் இருந்­தா­லும் நாட்டின் முக்­கிய பியூ தாய் கட்­சி­யின் பின்­ன­ணி­யில் அவரது குடும்பம் இயங்கி வரு­கிறது.

இந்த நிலை­யில் சமூக ஊடங்­கள் மூலம் வெற்­றி­யைச் சாதித்த மூவ் ஃபார்வர்ட் கட்­சியை தக்­சின் பாராட்­டி­யிருக்கிறார்.

சமூக ஊட­கங்­கள் மற்­றும் பய­னா­ளர் உரு­வாக்­கிய உள்­ள­டக்­கம் மூலம் வெற்றி பெற முடி­யும் என்­பதை மூவ் ஃபார்வர்ட் கட்சி நிரூ­பித்­துள்­ளது என்­றார் அவர்.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடந்த தேர்­த­லுக்கு முன்பு வரை மூன்று முறை ஆட்­சி­யி­லி­ருந்து அகற்­றப்­பட்­டா­லும் 2001ஆம் ஆண்­டி­லி­ருந்து தக்­சின் கட்சி தொடர்ந்து வெற்றி பெற்று வந்­துள்­ளது. இம்­முறை மூவ் ஃபார்வர்ட் கட்சி வெற்றி பெற்று முன்­னிலை வகிக்­கிறது.

"மக்­கள் வாக்கை கைப்­பற்று வதற்­காக அதிக வளங்­க­ளைப் பயன்­ப­டுத்த வேண்­டி­ய­தில்லை. பய­னா­ளர் உரு­வாக்­கிய உள்ள டக்­கம், இளை­யர்­கள் அதி­கம் பயன்­ப­டுத்­தும் டிக்­டாக்கை மூவ் ஃபார்வர்ட் ­கட்சி பயன்­ப­டுத்தி வாகை சூடி­யி­ருக்­கிறது," என்று இணை­யம் வழி­யாக நடை­பெற்ற இரண்டு மணி நேர அர­சி­யல் கலந்­து­ரை­யா­ட­லில் அவர் தெரி­வித்­தார். பல்­க­லைக்­க­ழக நக­ரங்­களில் தனது கோரிக்­கையை 'மூவ் ஃபார்வர்ட்' கட்சி வலு­வாக முன் வைத்­தி­ருந்­தது. சமூக ஊடகப் பிரசாரங்களில் ஈர்க்கப் பட்டபல இளை­யர்­கள் அக்­கட்­சிக்கு வாக்­க­ளிக்க தங்­கள் பெற்­றோ­ரை­யும் சம்­ம­திக்க வைத்தனர் என்று தக்­சின் குறிப்பிட்டார்.