ஹிரோஷிமா: ஜப்பானில் முன்னாள் பிரதமரும் இந்நாள் பிரதமரும் தாக்கப்பட்டதால் ஜி-7 மாநாட்டின் பாதுகாப்பை அந்நாட்டின் அரசாங்கம் வலுப்படுத்தி வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் தற்போதைய பிரதமர் ஃபியுமியோ கிஷிடா தாக்கப்பட்டார்.
ஆனால் அவர் அந்தத் தாக்குதலிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதற்கு முன்பு முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயை பொதுக்கூட்டத்தில் பேசியபோது ஒருவர் துப்பாக்கியால் சுட்டதால் அவர் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் ஜி-7 மாநாட்டில் பல தலைவர்கள் கலந்துகொள்ளவிருப்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.
மாநாட்டின்போது ஷிரோஷிமா நகரில் ஏறக்குறைய 24,000 பாதுகாப்புப் படை வீரர்கள் நிறுத்தப்படவிருக்கின்றனர்.
நாட்டின் இதர பகுதிகளிலிருந்து இதற்காக வீரர்கள் திரட்டப் படுகின்றனர்.
மே 19 முதல் 21 வரை நடைபெறும் ஜி-7 பேச்சுவார்த்தைக்கு முன்னதாக மேற்கு நகரத்தின் புகழ்பெற்ற அமைதிப் பூங்காவில் காவல்துறையினர் சுற்றுக் காவல் பணியைத் தொடங்கியுள்ளனர்.
அணுவாயுதக் குண்டு மாடம் வழியாக ஓடும் ஆற்றோரங்களிலும் பாதுகாப்புப் படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர் தொடர்ந்து வானத்தில் சுற்றி வருகிறது.
தலைநகர் தோக்கியோ மட்டுமல்லாமல் நகரத்துக்கு வெளியேயும் பாதுகாப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
மாநாட்டின் உயர் பாதுகாப்பு குறித்து ரயில்வே நிலைய தகவல் பலகைகளிலும் எச்சரிக்கப்பட்டு வருகின்றன.
ஜப்பானின் பெரிய நகரங்களில் உள்ள பொது இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைக்கப் படுவதில்லை.
இந்த நிலையில் ஆபத்தை ஏற்படுத்தம் சாத்தியமான இடங்களைப் பாதுகாப்புப் படையினர் மூடி வருகின்றனர்.

