ஊழல் குற்றச்சாட்டில் இந்தோனீசியாவில் அமைச்சர் கைது

ஊழல் குற்றச்சாட்டில் இந்தோனீசியாவில் அமைச்சர் கைது

1 mins read
e9c64c10-8042-4f89-801a-fad3d9a560eb
-

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வில் ஊழல் குற்றச்­சாட்­டில் அமைச்­சர் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

அந்த ஊழ­லால் அர­சாங்­கத்­துக்கு அரை பில்­லி­யன் டால­ருக்கு மேல் இழப்பு ஏற்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அதி­பர் ஜோக்கோ விடோடோ அமைச்­ச­ர­வை­யில் தொடர்பு, தொழில்­நுட்ப அமைச்­ச­ராக ஜானி ஜி பிளேட் 5வது இடத்­தில் உள்­ளார். அவர் மீது ஊழல் குற்­றச்­சாட்டு கொண்டு வரப்­பட்டு கைது செய்­யப்­பட்டு உள்­ளார்.

"ஆயி­ரக்­க­ணக்­கான கிரா­மங்­க­ளுக்கு இணை­யத் தொடர்பு வச­தி­க­ளைக் கொண்­டு­வ­ரு­வ­தற்­காக ஆயி­ரக்­க­ணக்­கான தக­வல் தொடர்பு கோபு­ரங்­க­ளைக் கட்­டு­வ­தற்­குத் தேவை­யான உப­க­ர­ணங்­களை வாங்­கு­வ­தில் திரு ஜானி ஈடு­பட்­டி­ருந்­தார்," என்று தலை­மைச் சட்ட அதி­காரி அலு­வ­ல­கம் தெரி­வித்­தது. அப்­போது அமைச்­ச­ராக இருந்த ஜானி முறை­கே­டாக நிதி­யைப் பயன்­ப­டுத்­தியதாகத் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­தோ­னீ­சி­யா­வில் ஆயுள் தண்­டனை விதிக்­கப்­படும் ஊழல் சட்­டத்தை அவர் மீறி­யி­ருப்­ப­தாக மற்­றொரு அதி­காரி கூறி­னார்.

திரு ஜானி மீது சட்­டப்­பூர்வ நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தால் அவ­ரது அமைச்­சின் சேவை­கள் பாதிக்­காது என்று தொடர்பு, தொழில்­நுட்ப அமைச்சு தெரி­வித்­தது. இந்த நிலையில் திரு ஜானியின் கைது எதிர்பாராதது என்று அதிபர் ஜோக்கோ விடோடோ அலுவலகம் கூறியது.