ஆசிய பயணத்தை குறைத்துக் கொண்ட அதிபர் பைடன்

ஆசிய பயணத்தை குறைத்துக் கொண்ட அதிபர் பைடன்

1 mins read
d9f50e08-5677-4f2c-9f7c-755849ec43c7
-

வாஷிங்­டன்: அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் தனது ஆசிய பய­ணத்­தின் ஒரு பகு­தியைக் குறைத்து கொண்­டுள்­ளார்.

உள்­ளூ­ரில் கடன் வரம்பு நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ள­தால் ஆஸ்­தி­ரே­லியா, பாப்­புவா நியூ கினியா பய­ணத்தை அவர் ரத்து செய்­வார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இருந்­தா­லும் ஜப்­பா­னின் ஹிரோ­ஹிமா நக­ரில் வெள்­ளிக்­கி­ழமை தொடங்­கும் மூன்று நாள் ஜி-7 உச்­ச­நிலை மாநாட்­டில் அவர் பங்­கேற்­கி­றார். பின்­னர் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­டன் நடை­பெ­றும் சந்­திப்­புக்­காக அவர் நாடு திரும்­பு­வார் என்று வெள்ளை மாளிகை தெரி­வித்­தது.

அவ­சர உள்­ளூர் பிரச்­சினைகளுக்கு முன்­னு­ரிமை அளிக்­கும் வகை­யில் அதி­பர் பைட­னின் பய­ணத்­தில் மாற்­றம் செய்­யப்­பட்­டி­ருப்­ப­தாகப் பகுப்­பாய்­வா­ளர்­கள் தெரி­விக்­கின்­ற­னர். ஆனால் வெளி­நா­டு­களில் அமெ­ரிக்கா மீதான நம்­ப­கத்­தன்மை குறை­யும் என்­றும் நீண்ட காலத்­திற்கு உல­க­ளா­விய தலை­மையை செலுத்­து­வ­தற்­கான அமெ­ரிக்­கா­வின் முயற்­சி­களில் பின்­ன­டைவு ஏற்­படும் என்­றும் அர­சி­யல் கவ­னிப்­பா­ளர்­கள் கருதுகின்­ற­னர்.

"வெளி­நாட்­டுப் பய­ணங்­க­ளை­விட உள்­ளூர் நிதிப் பிரச்­சி­னைக்கு அதி­பர் பைடன் முன்­னு­ரிமை அளிப்­பது அவ­சி­யம். அமெ­ரிக்க அர­சி­யலை நன்கு அறிந்­த­வர்­கள் அவ­ரது முடிவை புரிந்­து­கொள்­வார்­கள்," என்று ஆசியா-பசி­பிக் வட்­டாரத்தின் பாது­காப்­புத் தலை­வர் பேட்­ரிக் கிரோ­னின் தெரி­வித்­தார்.