சோல்: தென்கொரியாவில் சிகிச்சையளிக்க நான்கு மருத்துவமனைகள் மறுத்ததால் ஐந்து வயது சிறுவன் மரணமடைந்தான். மே 6ஆம் கடுமையான சுவாசப் பிரச்சினைகளுடன் சிறுவன் சோலில் உள்ள மருத்துமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டான். ஆனால் படுக்கை வசதி இல்லாததால் அவனை சேர்த்துக் கொள்ள மருத்துவமனை மறுத்துவிட்டது. இதர நான்கு மருத்துவமனைகளும் பல்வேறு காரணங்களைக் கூறி சிறுவனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டன. ஐந்தாவது மருத்துவமனை அவனை வெளிநோயாளியாக சிகிச்சை அளித்து வீட்டுக்கு அனுப்பிவிட்டது. ஆனால் சுவாசப் பிரச்சினை மோசமடைந்ததால் பெற்றோர் அருகில் உள்ள அவசர சிகிச்சைக்குப் பிரிவுக்குக் கொண்டு செல்வதற்குள் இறந்துவிட்டான்.
சிகிச்சை மறுப்பு; சிறுவன் மரணம்
1 mins read
-

