கோலாலம்பூரில் தீப்பிடித்த கடைத்தொகுதி மீண்டும் செயல்படத் தொடங்கியது

கோலாலம்பூரில் தீப்பிடித்த கடைத்தொகுதி மீண்டும் செயல்படத் தொடங்கியது

1 mins read
c34a4ab6-90d9-4d94-97e3-b037f1880e29
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யத் தலை­ந­கர் கோலா­லம்­பூ­ரில் உள்ள மாபெ­ரும் கடைத்­தொ­கு­தியான உள்­ளூர் மக்­க­ளுக்­கும் சுற்­று­லாப் பய­ணி­க­ளுக்­கும் நன்கு பிர­ப­ல­மான மிட் வேலி மெகா­மால் கடந்த புதன்­கி­ழமை (17.5.2023) தீப்­பற்­றிக்கொண்­டது.

தீயி­னால் சேத­ம­டைந்த இடங்­க­ளைச் சரி­செய்து நேற்று மீண்­டும் செயல்­ப­டத்­தொ­டங்­கி­ய­தாக அங்கு பணி­பு­ரிந்து வரும் 38 வயது ஆடவர் ஒரு­வர் தெரி­வித்­தார். கடைத்­தொ­குதி தீப்­பற்­று­வ­தற்கு முன்­தி­னம்­தான் அங்கு, தீப்­பி­டித்­தால் என்ன நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டும் என்­பது குறித்து ஒத்திகை நடத்­தப்­பட்­ட­தாக அந்த ஆடவர் தெரி­வித்­தார்.

"கடைத்­தொ­குதி பாது­காப்­பாக உள்­ளது என்­றும் அதை வழக்­கம்­போல் இயக்க அதி­கா­ரி­க­ளி­டம் இருந்து அனு­மதி கிடைத்­து­விட்­டது," எனவும் கடைத்­தொ­குதி நிர்­வா­கம் தனது ஃபேஸ்புக் இணை­யத் தளத்­தில் தெரி­வித்­துள்­ளது.

"தீப்­பற்­றி­ய­தற்­குப் பின், முழு­மை­யான விசா­ர­ணையை தெனகா நேச­னல் பெர்­ஹாட் அமைப்­பும் மலே­சிய தீய­ணைப்பு மற்­றும் துயர்­து­டைப்பு அமைப்­பும் மேற்­கொண்­டன. அதன்­பின் பாது­காப்­புக் குறித்து எவ்வகையிலும் அச்­சப்­ப­டத் தேவை­யில்லை என்று கடைத்­தொ­கு­தி­யைத் திறக்க அனு­ம­தி­ய­ளித்­தது என்று அவர் கூறி­னார். இந்த அவ­சர காலத்­தில் கடைக்­கா­ரர்­கள், வர்த்­த­கர்­கள், வாடிக்­கை­யா­ளர்­கள், அரும்­பா­டு­பட்டு தீயைக் கட்­டுப்­ப­டுத்­திய தீணை­ய­னைப்­புப் படை வீரர்­கள் ஆகி­யோர்­ நி­லை­மையை நன்கு புரிந்­து­கொண்டு இந்­தச் சவாலை முறி­ய­டிக்க எங்­க­ளு­டன் துணை நின்­ற­னர். அவர்­க­ளுக்கு எங்­கள் மன­மார்ந்த நன்றி என தனது ஃபேஸ் புக் வாயி­லாக தெரி­வித்­துக்கொண்­டது கடைத்­தொகுதி நிர்­வா­கம்.