அமேசான் காட்டில் விமான விபத்து; 4 குழந்தைகள் தப்பின

அமேசான் காட்டில் விமான விபத்து; 4 குழந்தைகள் தப்பின

1 mins read
ee45e49d-07ca-47d5-9033-020e021bb58f
-

பகோட்டா: கொலம்­பி­யா­வில் அமே­சான் பகு­தி­யில் மே 1ஆம் தேதி விமா­னம் ஒன்று விழுந்து நொறுங்­கி­யது. விமா­னத்­தில் பய­ணம் செய்­த­வர்­களில் மூன்று பேர் பலி­யா­னது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. விமானத்தில் இருந்த நான்கு குழந்­தை­கள் என்ன ஆனார்­கள் என்று தெரி­யா­மல் மீட்­புப்­ப­ணி­யி­னர் தவித்­து­வந்­த­னர். அதை­ய­டுத்து கொலம்­பிய ராணு­வம் நூறு வீரர்­கள் கொண்ட ஒரு குழுவை அமைத்து மோப்ப நாய்­க­ளின் உத­வி­யு­டன் தேடு­தல் வேட்­டையை முடுக்­கி­விட்­ட­னர்.

4, 9, 13 வய­து­களில் மூன்று குழந்­தை­கள் மற்­றும் 11 மாதக் குழந்­தை­யுமே காணா­மல் போன­வர்­கள்.

அடர்ந்த காட்­டில் 40 மீட்­டர் உய­ர­முள்ள அடர்த்­தி­யான மரங்­கள், அச்­சு­றுத்­தும் காட்டு விலங்­கு­கள், தொடர்ச்­சி­யான கன­மழை என பல இன்­னல்­க­ளை­யும் தாண்டி மூன்று ஹெலி­காப்­டர்­க­ளின் உத­வி­யால் தேடு­தல் வேட்­டை­யைத் தீவி­ரப்­ப­டுத்­தி­னர் ராணு­வத்­தி­னர். அப்­போது, காட்­டுக்­குள் ஒரு சிறிய கூடா­ரம் ஒன்­றைக் கண்­டு­பி­டித்­த­னர்.

சிறு­சிறு குச்­சி­களை ஊன்றி அமைக்­கப்­பட்­டி­ருந்­தது அந்­தக் கூடா­ரம். அந்­தக் கூடா­ரத்­தில்­தான் சிறு­வர்­கள் இருக்­க­வேண்­டும் என்று யூகித்­த­னர் ராணுவ வீரர்­கள். அதை­ய­டுத்து, அக்­குழந்­தை­கள் இருக்­கும் இடத்­தைக் கண்­டு­பி­டித்து பழங்­கு­டி­யி­னர் உத­வி­யு­டன் அவர்­களை ராணு­வத்­தி­னர் பத்­தி­ர­மாக மீட்­ட­னர். அந்தக் குழந்தைகள் இப்போது நலமாக உள்ளனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.