மலாக்கா: சாலைப் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த படகுச் சேவை

மலாக்கா: சாலைப் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த படகுச் சேவை

1 mins read
da1a6a6d-d820-44fe-b52f-5841a83bff28
-

மலாக்கா: மலே­சி­யா­வின் மலாக்கா மாநில அரசு, அங்கு நிலவி வரும் போக்­கு­வ­ரத்து நெரி­ச­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் வகை­யில் புதி­ய­தொரு உத்­தி­யைக் கையாண்­டுள்­ளது. சாலை­களில் பொதுப்­போக்­கு­வ­ரத்­து­களில் செல்­வோர், போக்­கு­வ­ரத்து நெரி­ச­லில் சிக்­கிக்கொள்­ளா­மல் தாங்­கள் செல்­லும் இடத்­திற்கு வெகு­வி­ரை­வில் செல்­வ­தற்கு ஆற்­றில் செல்­லும் 'வாட்­டர் டாக்சி' என்­ற­ழைக்­கப்­படும் பட­குச் சேவையை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.

பய­ணி­கள் போக்­கு­வ­ரத்து நெரி­ச­லில் சிக்­கிக்­கொள்­ளா­மல் சுங்கை மலாக்­கா­வின் இயற்­கைக் காட்­சி­களை ரசித்­துக்கொண்டே தங்­கள் பய­ணத்தை இனி­தா­கக் கழிக்­க­லாம்.

போக்­கு­வ­ரத்து நெரி­ச­லைக் கட்­டுப்­ப­டுத்த, மலாக்கா குடி­யி­ருப்­பா­ளர்­களை 'வாட்­டர் டாக்சி' சேவை­யைப் பயன்­ப­டுத்­து­மாறு அம்­மா­நில அர­சாங்­கம் ஊக்குவித்து வரு­கிறது.

முதற்­கட்­ட­மாக தடா­ரன் பெங்­க­லன் ராமா என்ற பகு­தி­யில் இருந்து ஆற்­றின் முகத்­து­வா­ரம் வரை­யி­லான நீர்­வ­ழிப்­பா­தை­யில் இரண்டு பட­குச் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மலாக்கா ஆறு மற்­றும் கடற்­கரை மேம்­பாட்டு ஆணை­யம் இந்­தச் சேவையை இயக்கி வரு­கிறது. மேலும் ஏரா­ள­மான 'வாட்­டர் டாக்­சி­கள்' பய­ணி­க­ளுக்­காக சேவை­யாற்ற உள்­ள­தாக அந்த ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

ஒரு பட­குத்­து­றை­யில் இருந்து இன்­னொரு பட­குத்­து­றைக்­குச் செல்­வ­தற்­கான பய­ணச் சீட்­டின் விலை 1 ரிங்­கிட்.

அனைத்­துப் பட­குத்­து­றை­களுக்­கும் செல்ல ஆகும் செலவு 8 ரிங்­கிட் மட்­டுமே என்று அந்த ஆணை­யத்­தின் தலைமை நிர்­வாகி முராட் ஹுசின் தெரி­வித்­தார்.

இந்­தச் சேவை­யின் இரண்­டாம் கட்­டத்­தில் வாட்­டர் டாக்சி சேவை பத்து ஹம்­பார் வரை நீட்­டிக்­கப்­படும் என்று அவர் தெரி­வித்­தார்.