ஹாங்காங்குக்கு செல்ல இலவச விமானச் சீட்டுகள்

ஹாங்காங்குக்கு செல்ல இலவச விமானச் சீட்டுகள்

1 mins read
bd3141e5-9b46-4679-8e4a-71eb858665da
-

ஹாங்­காங்: கேத்தே பசி­பிக் ஏர்­வேஸ் நிறு­வ­னம் வட­அ­மெ­ரிக்­கா­வில் தனது இணை­யத் தளத்­தில் ஹாங்­காங் சென்று வரு­வ­தற்­கான இல­வச விமா­னச் சீட்­டு­களை விநி­யோ­கிப்­ப­தாக அறி­விப்பு ஒன்றை விடுத்­தி­ருந்­தது.

அத­னை­ய­டுத்து ஆயி­ரக்­கணக்­கா­னோர் அந்த இணை­யத் தளத்­தில் இல­வச விமா­னச் சீட்­டுக்­கா­கப் பதி­வு­செய்யக் காத்திருந்தனர். அதே­போல் அமெ­ரிக்கா, கன­டா­வில் இருந்து 4,445 விமா­னச் சீட்­டு­கள் இல­வ­ச­மாக விநி­யோ­கம் செய்­யப்­பட்­டுள்­ளன. முத­லில் பதிவு செய்­ப­வர்­க­ளுக்கே முன்­னு­ரிமை என்ற அடிப்­ப­டை­யில் விமா­னச் சீட்­டு­கள் விநி­யோ­கிக்­கப்­ப­ட்டன. அத­னை­யடுத்து ஏரா­ள­மா­னோர் முந்­திக்­கொண்டு இணை­யத் தளத்­தில் பதி­வு­செய்­யக் காத்­துக்­கொண்­டி­ருந்­த­னர். இருப்­பி­னும் அனைத்து இல­வசச் சீட்­டு­களும் நண்­ப­க­லில் கொடுத்து முடிந்­து­விட்­ட­தாக அந்த நிறு­வ­னம் தனது இணை­யத் தளத்­தில் அறி­வித்­தது.

ஹாங்­காங்­குக்கு மீண்­டும் சுற்­றுப்­ப­ய­ணி­களை வர­வ­ழைத்து சுற்­று­லாத்­து­றைக்கு உயி­ரூட்­டும் ஹாங்­காங்­கின் திட்­டத்­தின் ஒரு பகு­தியே இந்த இல­வச விமா­னச் சீட்டு விநி­யோ­கம் என்று கூறப்­படு­கிறது.

உலக நிதி­மை­ய­மா­கத் திகழ்ந்த ஹாங்­காங்­கில் கொவிட்-19 பர­வ­லால் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் அங்கு நிதித்­துறை, சுற்­று­லாத்­துறை ஆகி­ய­வற்றை முடக்­கிப்­போட்டு விட்­டன. அவற்­றுக்கு மீண்­டும் புத்­து­யிர் கொடுக்­கும் வகை­யில் ஹாங்­காங் பல திட்­டங்­களைச் செயல்­ப­டுத்தி வரு­கிறது.