புதிய தடைகள் விதித்து ரஷ்யாவுக்கு நெருக்குதல்

புதிய தடைகள் விதித்து ரஷ்யாவுக்கு நெருக்குதல்

2 mins read
1784f512-b077-4312-85d8-855f82fdcc0a
-

ஜப்பான் உச்சநிலை மாநாட்டில் கூடும் ஜி7 தலைவர்கள்

ஹிரோ­ஷிமா: ரஷ்­யா­மீது கூடு­தல் தடை­க­ளை­யும் போர்க்­க­ளத்­தில் அது பயன்­ப­டுத்­தும் ஆயு­தங்­களுக்­குக் கட்­டுப்­பா­டு­க­ளை­யும் விதித்து ஜி7 நாடு­கள் ரஷ்­யா­வுக்கு நெருக்­கு­தலை அதி­க­ரிக்­கும் என்று அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் நிர்­வா­கத்­தைச் சேர்ந்த மூத்த அதி­காரி ஒரு­வர் கூறி­யுள்­ளார்.

ஜப்­பா­னின் ஹிரோ­ஷி­மா­வில் நடை­பெ­றும் உச்­ச­நிலை மாநாட்­டின் முதல் நாளில், ரஷ்யா-உக்ரேன் போரில் உக்­ரே­னுக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தாக அறிக்கை வெளி­யிட்டு தங்­க­ளது கடப்­பாட்டை தலை­வர்­கள் மறு­உறுதிப்­ப­டுத்­து­வர். ரஷ்­யா­வில் இருந்து ஏறக்­குறைய 70 பொருள்­க­ளுக்கு பைடன் நிர்­வா­கம் தடை­வி­திக்க உள்­ளது.

ஏற்­கெ­னவே உள்ள தடை­களைச் சுற்­றிச் சென்­ற­தற்­காக அல்­லது நிதி ஆத­ரவு அளித்து போரை ஒருங்­கி­ணைத்­த­தற்­காக ஏறக்­கு­றைய 300 பொருள்­கள், கப்­பல்­கள், விமா­னங்­களை தான் குறி­வைக்­கப் போவ­தா­க­வும் பைடன் நிர்­வா­கம் அறி­விக்­கப் போகிறது.

போருக்­குத் தேவை­யான பொருள்­க­ளைப் பெறு­வ­தில் ரஷ்­யா­வின் ஆற்­றலை அமெ­ரிக்கா மேலும் முடக்­க­வுள்­ளது. தடை­விதிப்­பைத் தவிர்ப்­ப­தில் நில­வும் குறை­பா­டு­களும் சரி­செய்­யப்­படும் என்று அந்த மூத்த அதி­காரி தெரி­வித்­தார்.

போர் முடி­யும்­வரை ரஷ்­யா­வின் இறை­யாண்மை சொத்­து­களை அசைக்க முடி­யா­மல் வைத்­தி­ருப்­ப­தில் ஜி7 நாடு­கள் தொடர்ந்து கடப்­பாடு கொள்­ளும். அதோடு, ரஷ்ய எரி­சக்­தி­யைச் சார்ந்­தி­ருக்­கும் நிலையை மேலும் குறைக்க அந்­நா­டு­கள் முற்­படும்.

உக்­ரே­னிய அதி­பர் வொலோ­டி­மிர் ஸெலென்ஸி மெய்­நி­கர் வழி­யாக ஜி7 கூட்­டத்­தில் பங்­கேற்­பார். கூடு­தல் ஆயுத விநி­யோ­கத்­துக்­கான வாதத்தை முன்­வைக்க, கடந்த வாரம் வெவ்­வேறு ஐரோப்­பிய நாடு­க­ளின் தலை­ந­கர்­க­ளுக்கு அவர் சென்று வந்­தார்.

ஜி7 தலை­வர்­கள் நேற்று ஹிரோ­ஷிமா அமைதி நினை­வுச்­சின்ன பூங்­கா­விற்குச் சென்­ற­னர். அணு­வா­யு­தப் பயன்­பாட்­டிற்கு கட்­டுப்­பாடு விதிப்­ப­தில் அமெ­ரிக்கா கொண்­டி­ருக்­கும் கடப்­பாட்டை திரு பைடன் மறு­உறுதிப்­ப­டுத்­து­வார்.