வெப்பநிலை அதிகரிப்பு: 9 மி. மரணங்கள் ஏற்படும் அபாயம்

வெப்பநிலை அதிகரிப்பு: 9 மி. மரணங்கள் ஏற்படும் அபாயம்

2 mins read
f72b53c8-08e5-459e-a8eb-0974895018ae
-

ஜெனிவா: அதி­க­ரித்­து­வ­ரும் வெப்ப­நி­லை­யால், உல­கச் சுகா­தார இலக்­கு­களை எட்ட மேலும் சிர­ம­மாகி வரு­கிறது.

இந்த நூற்­றாண்­டின் இறு­திக்­குள், ஒவ்­வோர் ஆண்­டும் ஒன்பது மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான பருவ­நிலை தொடர்­பான மர­ணங்­கள் ஏற்­ப­டக்­கூ­டிய அபா­யம் இருப்­ப­தாக உலக சுகா­தார நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

"தூய்­மை­யான காற்று, தண்­ணீர், மண் முதல் உணவு முறை, வாழ்­வா­தா­ரம் வரை, சுகா­தா­ரம் தொடர்­பான அனைத்து அம்­சங்­களும் பரு­வ­நிலை மாற்­றத்­தால் பாதிக்­கப்­ப­டு­கின்­றன" என்று உலக சுகா­தார நிறு­வ­னம் நேற்று வெளி­யிட்ட அதன் வரு­டாந்­திர உல­கச் சுகா­தா­ரப் புள்­ளி­வி­வர அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.

பரு­வ­நிலை மாற்­றத்­தைச் சமா­ளிப்­ப­தில் மேலும் தாம­தம் ஏற்­பட்­டால், சுகா­தார அபா­யங்­கள் அதி­க­ரிக்­கும் என்­றும் உல­க­ளா­விய சுகா­தா­ரத்­தில், பல்­லாண்­டு­களாக ஏற்­பட்­டுள்ள முன்­னேற்­றங்­கள் பல­வீ­ன­ம­டை­யும் என்­றும் அதன் கூட்­டுக் கடப்­பா­டு­கள் முரண்­படும் என்­றும் நிறு­வ­னம் கூறி­யது. ஆப்­பி­ரிக்க நாடு­கள், ஏழ்­மை­யான தேசங்­கள், சிறிய தீவு­கள் ஆகி­யவை வர­லாற்று ரீதி­யாக, உல­க­ள­வில் கரி­ய­மில வாயு வெளி­யேற்­றத்­திற்கு மிகக் குறைந்த அள­வில் பங்­க­ளித்­தாலும், அவை பரு­வ­நிலை மாற்­றத்­தின் மிகப் பெரிய சுகா­தார விளை­வு­களை எதிர்­நோக்­கு­வ­தாக நிறு­வ­னம் தெரி­வித்­தது.

மாறி­வ­ரும் வெப்­ப­நி­லை­யா­லும் மழை பொழி­வா­லும் கொசுக்­கள், உண்­ணி­கள், எலி­கள் ஆகி­ய­வற்­றால் உண்­டா­கும் நோய்­கள் புதிய வட்­டா­ரங்­களில் ஏற்­படும் அபா­யம் உள்­ளது. அந்­நோய்­க­ளால் ஏற்­கெனவே ஒவ்­வோர் ஆண்­டும் 700,000 பேருக்­கும் மேல் பலி­யா­கின்­ற­னர். சில வட்­டா­ரங்­கள் கடு­மை­யான வறட்­சி­யை­யும் வேறு சில வட்­டா­ரங்­கள் வெள்­ளம், பூசல் ஆகி­ய­வற்­றை­யும் எதிர்­நோக்­கும் வேளை­யில், 'மார்­பர்க்' கிருமி, காலரா, போலியோ நோய் உள்­ளிட்ட நோய்­க­ளின் பர­வ­லால், ஏற்­கெ­னவே இருக்­கும் குறை­வான வளங்­கள், சுகா­தார ஊழி­ய­ர­ணி­கள், உள்­கட்­ட­மைப்­பு­கள் முத­லி­யவை நெருக்­கு­த­லுக்கு உள்­ளா­கின்­றன.