மலேசியாவில் வறண்ட வானிலை மோசமாகக்கூடும்

மலேசியாவில் வறண்ட வானிலை மோசமாகக்கூடும்

2 mins read
2ae8b549-1b29-424c-bcf2-8480e8653f7c
-

கோலா­லம்­பூர்: வரும் செப்­டம்­பர் வரை ஏற்­ப­ட­வி­ருக்­கும் தென்­மேற்கு பரு­வ­நி­லை­யின்­போது மலே­சி­யா­வில் வறண்ட வானிலை அண்­மைய ஆண்டு­களில் இருந்ததைவிட மோசமானதாக இருக்கக்­கூ­டும் என்று அந்­நாட்­டின் வானிலை ஆய்வு மையம் முன்­னு­ரைத்­துள்­ளது.

புளூம்­பெர்க் செய்தி நிறு­வ­னத்­தின் கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளித்த மையம், தொடர்ச்­சி­யாக குறைந்­தது மூன்று நாள்­க­ளாக அங்கு வெப்­ப­நிலை 37 டிகிரி செல்­சி­யஸ் வரை எட்­டக்­கூ­டும் என்று குறிப்­பிட்­டது.

முதல் நிலை எச்­ச­ரிக்­கை­யாக வகைப்­ப­டுத்­தப்­படும் அத்­த­கைய நிலை, நேற்று முன்­தின நில­வ­ரப்­படி ஐந்து மாவட்­டங்­களில் ஏற்­பட்­டது.

'எல் நினோ' வானிலை நிகழ்­வுக்கு மத்­தி­யில், ஆசி­யா­வில் கடந்த சில வாரங்­க­ளாக கடு­மை­யான வெப்­பம் நிலவி வரு­கிறது. வியட்­னா­மி­லும் லாவோ­சி­லும் இந்த மாதம் முன்­னெப்­போ­தும் இல்­லாத அளவு வெப்­ப­நிலை உயர்ந்­தது. சிங்­கப்­பூ­ரி­லும் 40 ஆண்­டு­களில் காணப்­ப­டாத அளவு கடந்த சனிக்­கி­ழமை வெப்­ப­நிலை 37 டிகிரி செல்­சி­யசை எட்­டி­யது.

எனி­னும், மலே­சி­யா­வின் சில பகு­தி­களில் வீசி­வ­ரும் வலு­வான காற்­றும் பெய்­து­வ­ரும் கன­ம­ழை­யும் வெப்­பம் மோச­ம­டை­வதை அனே­க­மாக தடுக்­கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி­யது. பல ஆசிய நாடு­களில் கொளுத்­தி­வ­ரும் வெயி­லின் தாக்­கத்­தில் இருந்து மலே­சியா பாது­காக்­கப்­பட்­டுள்­ளது. மலே­சிய தீப­கற்­பத்­தின் மேற்கு கரை­யோ­ரப் பகு­தி­க­ளி­லும் சாபா மாநி­லத்­தின் மேற்­கி­லும் கன­ம­ழை­யும் மணிக்கு 50 கிலோ­மீட்­டர் வரை வேகத்­தில் வீசும் காற்­றும் அதற்­குக் கார­ணம். ஆனால், வறண்ட வானிலை காட்­டுத்­தீக்­கும் புகை­மூட்­டத்­துக்­கும் இட்­டுச்­செல்­லக்­கூ­டும் என்­ப­தால் நில­வ­ரம் மோச­ம­டை­வ­தற்கு தான் தயா­ராக இருப்­ப­தாக வானிலை ஆய்வு மையம் குறிப்­பிட்­டது. மலே­சி­யா­வில் 1998 ஏப்­ரல் 9ஆம் தேதி ஆக அதிக வெப்­ப­நி­லை­யாக 40.1 டிகிரி செல்­சி­யஸ் பதி­வா­னது. அப்­போது 'எல் நினோ' வானிலை நிகழ்வு ஏற்­பட்­டது.